புதன், 24 நவம்பர், 2010

கனாடவில் அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

கனாடவில் அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை செப்டெம்பர் மாதமளவில் 47% வீழ்ச்சியடைந்துள்ளதாக கனேடிய இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதமளவில் அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை 75% காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 492 இலங்கையர்களுடன் எம்.வீ.சன் ஸீ என்ற கப்பல் கனடாவை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களை 2009 ஆண்டு ஜனவரி முதல் 2010ம் ஆண்டு ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் 80 முதல் 90 வீதம் வரையில் கனடா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகளவான இலங்கையர்களுக்கு கனடாவில் அகதி அந்தஸ்து வழங்குவதால் கனேடிய மக்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய தமிழ் காங்கிரஸ் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனாலேயே செப்டெம்பர் மாதமளவில் இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கும் வீதம் 47% வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக