வெள்ளி, 26 நவம்பர், 2010
கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு லண்டனில் வசிக்கும் தமிழர் உபவேந்தராக நியமனம் ?
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக தற்போது லண்டனில் வசிக்கும் கலாநிதி எஸ்.திருச்செல்வம் நியமிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட கல்லாறு என்னும் இடத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் வேந்தராக முன்பு கடமையாற்றியிருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரதியமைச்சர் முரளிதரன் பிரிந்துசென்ற வேளையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் இவர் லண்டனுக்கு சென்றிருந்தார். இந்தவேளையில் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு சிங்களவர் ஒருவரை உபவேந்தராக நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவந்த நிலையில் அதனை நிறுத்துவதற்காக பல்கலைக்கழகத்தின் அக்கறையுள்ள மாணவர்கள் மற்றும் பிரதியமைச்சர் முரளிதரன், தமிழ் தேசிய கூடடமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் ஆகியோர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்துள்ளனர்.இந்த நிலையில் இது தொடர்பில் எமக்கு லண்டனில் இருந்து கருத்து தெரிவித்த கலாநிதி எஸ்.திருச்செல்வம், தம்மை மீள பல்கலைக்கழகத்தில் வந்து இணைந்துகொள்ளுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக