வெள்ளி, 5 நவம்பர், 2010

கமலின் மருதநாயகத்தை தயாரிக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்?

Maruthanayagam Kamalகமல் ஹாஸனின் மருதநாயகம் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பார் என்று செய்திகள் வெளியாகத் துவங்கியுள்ளன.

கமல் நடித்த தசாவதாரம் படத்தைத் தயாரித்தவர் ரவிச்சந்திரன். இந்தப் படத்தின் மூலம் அவர் தனது பேனர் பெயரான Oscar என்பதை Aaskar என்று மாற்றிக் கொள்ள வேண்டி வந்தது. Oscar Academy-ன் எதிர்ப்பு காரணமாக இந்த மாற்றத்தை அவர் செய்யவேண்டியிருந்தது.

அதன் பிறகு படத்தின் பிஆர்ஓ உள்ளிட்ட பல விவகாரங்களில் கமலுக்கும் ரவிச்சந்திரனுக்கும் ஏழாம் பொருத்தமாகிவிட, கமல் கடைசி நேரத்தில் தசாவதாரம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்விலும் பங்கேற்காமல் தவிர்த்தார்.

இப்போது, ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் கமலுக்கும் மீண்டும நட்பு துளிர்த்துள்ளது. இதன் விளைவு அறிவிப்போடு நின்று போன கமல்ஹாஸனின், மர்மயோகி, மருதநாயகம் மற்றும் தலைவன் இருக்கின்றான் ஆகிய மூன்று படங்களில் ஏதேனும் ஒன்றைத் தயாரிக்கப் போவதாகக் கூறி வருகிறாராம்.

குறிப்பாக மருதநாயகத்தை ரூ 200 கோடி பட்ஜெட்டில் தயாரிப்பது பற்றி ஆலோசனை செய்து வருகிறாராம்.

இதனை ஆஸ்கர் ரவிச்சந்திரனே தன்னைச் சந்திக்கும் பத்திரிகையாளர்களிடம் கூறிவருகிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக