வெள்ளி, 12 நவம்பர், 2010

தமிழ்ச்செல்வன் சிலை எங்கே?சிலையைக் காணோம்

தமிழ்ச்செல்வனுக்கு சிலை வைத்து அதனை பெரிதாக விளம்பரம் செய்து தமக்குள் சுய இன்பம் தேடிய பாரிஸ் புலி வால்கள் இப்போ அடங்கிப்போயிருக்கிறார்கள். சிலை வைத்து ஒரு நாள் திருவிழா நடந்து முடிந்து விட்டது. புலி ஊடகங்கள் எல்லாம் ஏதோ பெரிதாக தாம் சாதித்துவிட்டது போல பிதற்றின. அடுத்தநாள் சிலையைப் பார்க்க போன இடத்தில் சிலையைக் காணோம். சிலையைப்பற்றி விசாரித்தபோது சிலையை உள்ளே எடுத்து வைத்து விட்டதாக சொல்லப்பட்டது. என்னடா இது! அப்படியானால் சிலை நிரந்தரமாக முன்னால் வைக்கப்படதா என நிர்வாகத்திடம் கேட்ட போது அவர் சிரித்தபடி சொன்னார்  சிலையை நிரந்தரமாக முன்னால் வைக்க மாட்டோம். அப்படி வைக்கவும் முடியாது என அவர் சொன்னார்.
அப்படியானால் என்ன கூத்து நடந்தது?. ஒன்றுமில்லை தமிழ்ச்செல்வனுக்கு சிலை வைத்து விளம்பரம் செய்ய சில புலிவால்கள் ஆசைப்பட்டன. புலிவால்களுக்கு எதையாவது செய்து விளம்பரம் தேட வேண்டும் இல்லாவிட்டால் பத்தியப்படாது. அதற்காக நகரசபையிடம் விண்ணப்பித்தார்கள். அவர்கள் ஒருநாள் இந்தக்கூத்தை நடாத்த அனுமதித்தார்கள். அதற்குப் பின் சிலையை  உள்ளே கொண்டு போய்வைத்துவிட வேண்டும் என என கூறியிருக்கிறார்கள். ஒருநாள் சிலையை வைத்து விழாக்கொண்டாடினார்கள். பிரஞ்சுக்காரர்கள் ஏன் எதற்கு எனக் கேட்கவில்லை. பிரஞ்சுப்பத்திரிகைகள் கூட கண்டுக்கவில்லை. தமிழ்ப்பத்திரிகைகள்தான் இந்த திறப்பு விழா செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்தன. இலங்கை அரசும் பிரான்ஸ் அரசை என்ன நடக்குது என விசாரித்தது. ஒருநாள் கூத்து அதற்குப்பிறகு சிலை இருக்குமிடம் தெரியாது என அறிவித்தல் போக இலங்கை அரசும் மௌனமாகியது. புலிகள் சிலையை வைத்து ப+சித்தபின் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பழைய சிலைகளை வைக்கின்ற இடத்தில் தமிழ்ச்செல்வனின் சிலையும் கொண்டு போய் வைக்கப்பட்டுள்ளது.
ஏதோ நிரந்தரமாக தமிழ்ச்செல்வனின் சிலை வைக்கப்படும் என்கிற எண்ணத்தில் அந்த இடத்திற்கு மறுநாள் போனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். தமிழ்ச்செல்வனின் சிலையை நிரந்தரமாக வைக்க பிரான்ஸ் அரசு விடுமா என்ன!. தமிழ்ச்செல்வன் என்ன உலக சமாதானத்திற்காக பாடுபட்டவரா அல்லது நோபல் பரிசு பெற்ற மேதையா?  சிலையை வைத்து மரியாதை செய்ய அவர் ஒன்றும் மகான் இல்லையே!
புலிவால்கள் சமூகத்திற்காக உருப்படியாக எதையும் யோசிப்பதில்லை. இப்படி உருப்பேறாத விடயங்களை செய்து செய்து இன்னும் தாங்கள் அப்படியேதான் இருப்போம் என நிருபித்து வருகிறார்கள். தலைவர் 12000பேரோடு மீண்டும் வருவார் தமிழ்ஈழம் எடுத்து தருவார் என பிதற்றியபடி இருக்கிறார்கள். இதுகளையெல்லாம் இன்னும் பைத்தியக்கார ஆஸ்பத்திரிகளில் சேர்க்காமல் இருந்தால் தமிழ்ச்சமூகத்திற்குத்தான் உபத்திரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக