வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு அரசாங்கம் வழங்க போகும் அரசியல் தீர்வு, அதனுடன் சம்பந்தப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் மூவரடங்கிய பிரதிநிதிகள் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள தமிழக முதலமைச்சரின் பிரதிநிதிகள், இலங்கை தலைமைகள் இந்திய பிரதமரிடம் கையளித்த யோசனைகள் குறித்து அறிந்துக்கொள்ள உத்தேசித்துள்ளனர். அதேவேளை இந்திய பிரதமரிடம், இலங்கை ஜனாதிபதி வழங்கிய தீர்வு யோசனைகள் அடங்கிய பிரதி, கருணாநிதியின் பிரதிநிதிகளுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக