புதன், 17 நவம்பர், 2010

யாழ். மாணவிகள் மூவர் நஞ்சருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதி


யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றின் மாணவிகள் மூவர் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பிரஸ்தாப மாணவிகள் மூவரும் பத்தாம் வகுப்பில் கல்வி கற்பவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
பாடசாலை அதிபர் ஏசியதன் காரணமாகவே தாம் நஞ்சருந்தியதாக அவர்கள் தெரிவித்த போதிலும், அதிபர் ஏசியதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.
அதே நேரம் சம்பவம் தொடர்பில் பொலிசாரிடம் வினவியபோது அது தொடர்பில் இதுவரை எதுவித முறைப்பாடும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக