புதன், 17 நவம்பர், 2010

காங்.குடன் கூட்டணி என்று நான் மிரட்டியதால்தான் ராஜா விலகினார்-ஜெ

Jayalalithaசென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நானும், பிற கட்சிகளும், சிஏஜியும் குற்றம் சாட்டியபோதெல்லாம் ராசாவோ அல்லது கருணாநிதி [^] யோ செவி சாய்க்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு என்று நான் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த உடனேயே மூன்று நாட்களில் தன்னுடைய பதவியை ராசா ராஜினாமா செய்திருக்கிறார் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று அ.தி.மு.க. உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை எழுப்பியதற்கு எதிர்ப்பு [^] தெரிவித்து, முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அவருடைய அறிக்கையில், பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் இருக்கிறார் என்றும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் தான் இருப்பார் என்றும், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோருவதன் மூலம் எதிர்க்கட்சியினருக்கு, பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி மீது நம்பிக்கை இல்லையா என்றும் வினவி இருக்கிறார். இந்தக் கேள்வியில் இருந்து ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லை என்பது தெளிவாகிறது.

எங்களைப் பொறுத்த வரையில், ஸ்பெக்ட்ரம் வழக்கை அதிக அதிகாரம் கொண்ட, மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக்குழு தான் விசாரிக்க வேண்டும். பதவி விலகிய ராசாவோ தன் மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறுகிறார். அப்படி இருக்கையில் கருணாநிதி ஏன் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை என்ற கோரிக்கையை கண்டு அஞ்சுகிறார்?

அடுத்தபடியாக, என்னுடைய அறிக்கையின் பயனா கத்தான் ராசா தன் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்று வெளியிடப்பட்ட செய்தியை பொறுத்துக்கொள்ள முடியாமல், என்னுடைய அறிக்கைக்கு பொருளுமில்லை, பொருத்தமும் இல்லை என்று கூறி இருக்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தவறு நடந்திருக்கிறது என்று மத்திய கண்காணிப்பு ஆணையம் சுட்டிக்காட்டியது; டெல்லி உயர் நீதிமன்றம் [^] சுட்டிக்காட்டியது; இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறைத்தலைவர் தன்னுடைய இடைக்கால அறிக்கையில் 1,40,000 கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார் ராசா என்று குற்றம் சாட்டினார்.

ராசா இன்னமும் அமைச்சர் பதவியில் எப்படி தொடர்கிறார்? என்று உச்ச நீதிமன்றம் வெளிப்படையாக அண்மையில் தனது கருத்தை தெரிவித்தது. இதனையடுத்து, தனது இறுதி அறிக்கையில் 1,76,379 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறைத் தலைவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ஆனால், இதற்கெல்லாம் ராசாவோ அல்லது கருணாநிதியோ செவி சாய்க்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு என்று நான் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த உடன், மூன்று நாட்களில் தன்னுடைய பதவியை ராசா ராஜினாமா செய்திருக்கிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கிரிமினல் வழக்கு, கைது நடவடிக்கை [^] என இன்னும் பல பெரிய அஸ்திரங்கள் எல்லாம் வரும் போது என்ன செய்வாரோ? என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
பதிவு செய்தவர்: நிஷாந்தன்
பதிவு செய்தது: 17 Nov 2010 7:36 pm
இலெமுரியா என்கிற ஆசியாவையும் தென் ஆபிரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் இணைத்த கண்டத்தில் வாழ்ந்து வந்தோம் ,முதலில் கடற்கோள் என்கிற இயற்கை அழித்தது,பின்னர் மொகஞ்சதாரோ ,ஹரப்பாவில் செழித்து வாழ்ந்தோம்.உண்ண உணவில்லாமல் வந்த வந்த நீங்கள் எங்களை அடித்தீர்கள்

பதிவு செய்தவர்: சோ ராமசாமி சுப்ரமணிய சாமி
பதிவு செய்தது: 17 Nov 2010 7:28 pm
கருணாநிதி அட்டசியை கலைக்க அல்லது அவரது ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி மக்களை கவர ஜெயலலிதா செய்யும் சதி தான் இது என்பது தெளிவாகிறது. இவள் எபொழுது எல்லியம் கொடநாடு செல்கிரலோ அப்பொழுது எல்லாம் இது மாதிரி நடக்கிறது. தமிழ் நாட்டை ராமன் ஆண்டாள் என்ன இராவணன் ஆண்டாள் என்ன. இந்த பொம்பளை மட்டும் ஆளவே கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக