வியாழன், 25 நவம்பர், 2010
யாழ். மாணவர்களுக்கு சிங்கள மொழி வகுப்பு
யாழ். அரச மற்றும் தனியார் ஊழியர்கள் உட்பட பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கான சிங்கள மொழிமூலம் வகுப்பு கடந்த நவம்பர் 6ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்பு சிவில் இராணுவ ஒருங்கிணைணப்புச் செயற்பாட்டின் கீழ் யாழ். தலைமையக படைவீர்ர்களால் நடத்தப்படுகிறது. சிங்களமொழியை கற்க ஆர்வத்துடன் காணப்படும் இளைஞர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க மானிப்பாயை சேர்ந்த 513 ஆவது பிரிகேட்டால் இவ்வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் யாழ் பல்கலைகழக நண்பர்களுடனும் தெற்கில் இருந்து வடக்கு விஜயம் செய்யும் சுற்றுலா பிரயாணிகளுடன் பழகுவதற்கும், வட பகுதி மக்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்த அயராது பாடுபடும் பாதுகாப்பு படையினருடன் சிறந்த முறையில் மரியாதையுடன் பழகவும் பேருதவியாக அமையும் என இவர்கள் தெரிவித்துள்ளனர். படைவீர்ர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி மூலம் சகோதரதுவத்துடன் கூடிய சமூகத்தை கட்டியேழுப்புவதுடன் தொடர்பாடல்களில் காணப்படும் தடைகளும் நீக்கப்படும். வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் பி.ப. 2.00 மணி முதல் 4.00 மணி வரை மானிப்பாய் மகளீர் கல்லூரியில் பேராசிரியர் எஸ்.லீலகிரிஸ்னன் அவர்களால் இலவசமாக நடாத்தப்படுகிறது. இப்பயிற்சி நெறியின் இறுதியில் தமது திறமைகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. சுமார் 100 இளைஞர் மற்றும் யுவதிகள் இம்முதலாவது பயிற்சி நெறியில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக