by salasalappu
தமிழகத்து தொலைக்காட்சிகளில் அண்மைக் காலமாக ஒரு விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது.விவசாய உற்பத்திக்காகச் செய்யப்படும் அந்த விளம்பரத்தில் தங்கராசு என்ற விவசாயிக்கு கடன் கொடுத்த ஒருவர் அவரின் வீட்டிற்குச் சென்று தங்கராசு… தங்கராசு… எனக் கூப்பிடுகின்றார்.தங்கராசுவின் மனைவி வீட்டுக்கு வெளியில் வந்து அவர் ஸ்கூலுக்கு (School) போய்விட்டார் என தெரிவிக்கின்றார். இதைக்கேட்ட கடன் கொடுத்தவர் நளினமாகச் சிரிக்கின்றார். என்ன? இந்த வயதில் ஸ்கூ லுக்குப் போயிற்றாரா? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும் என்கிறார். உடனே தங்கராசுவின் மனைவி அவர் விவசாய ஸ்கூலுக்கு போயிற்றார் என விளக்கம் கொடுக்கின்றார்.
கூடவே விவசாயப் பள்ளியில் விவசாயிகளுக்கு விளக்கம் கொடுக்கும் காட்சிகளும் காண்பிக்கப்படுகின்றன. தொடர்ந்து ஒரு கட்டுப் பணத்தைக் கொண்டு சென்று கடன் கொடுத்தவரிடம் செலுத்தி விடுகின்றார் தங்கராசு. என் கடன் எல்லாம் தந்து முடிந்தாயிற்று என்று தங்கராசு மகிழ்ச்சியடைவதாகவும் அந்த விளம்பரம் அமைந்திருந்தது. அந்த விளம்பரம் பற்றி இங்கு ஏன் பிரஸ்தா பிக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்.
எங்களுக்கு அண்மையில் இருக்கக்கூடிய தமிழகத்தில் விவசாயம் விளைகின்றது. நெற்செய்கை முதல் கரும்புச் செய்கைவரை அங்கு வேளாண்மை கோலோச்சுகின்றது.ஆனால் எங்கள் மண்ணில் விவசாய விளை நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு மேலாக தென்னை விளையும் முகமாலை, பளை, ஆழியவளை, கிளாலி ஆகிய பெரும் பிரதேசங்கள் மிதி வெடிகளின் பூமியாகி முட்செடிகளதும், பற்றைகளதும் ஆக்கிரமிப்பில் வளம் இழந்து போயிற்று.
மறுபுறத்தே பொன் விளையும் வன்னி மண் கெந்தகத்தைத் தாங்குவதும், உருக்குலைந்த சடலங்களின் முணுமுணுப்பில் அழுவதும், முட்கம்பி வேலிகளின் தடையில் தன் விவசாய எஜமான்களைக் காணமுடியாமல் விம்மி வெதும்புவதுமாக காலம் போக்குகின்றது.
எப்படி எங்கள் மண்ணில் விவசாயம் மேலெழும்; முயற்சிகள் திருவினையாக்கும். இவை யுத்தத்தால் ஏற்பட்ட துயரங்கள். இதற்கு அப்பால் விவசாயச் செய் நிலத்தை ஆக்கிரமிக்கும் பாதீனியம், புதுப்புது பூச்சி வியாதிகள், தடுப்பது யார்? சந்தையில் ஒரு பிடி கீரை நாற்பது ரூபாய். பூச்சி சல்லடை போடாத இலையைக் காண்பது அரிது. எப்படி எங்கள் விவசாயம்?
அட! தமிழகத்து தங்கராசு எங்கள் தமிழ் மண்ணில் விவசாயம் செய்திருந்தால் வைத்திய சாலைக்குத்தான் சென்றிருப்பார். தீரா வருத்தம் காரணமாக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக