புதன், 1 டிசம்பர், 2010

இந்தியன் வங்கி யாழ்ப்பாணம், திரிகோணமலை உள்ளிட்ட மூன்று இடங்களில்

இந்தியன் வங்கி யாழ்ப்பாணம், திரிகோணமலை உள்ளிட்ட மூன்று இடங்களில் புதிய கிளைகளை தொடங்க முடிவு செய்துள்ளது.

வரும் பொங்கல் திருநாளையொட்டி இந்தி புதிய கிளைகள் தொடங்கப்படும் என, இந்தியன் வங்கி பொதுமேலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கை தமிழர்களின் மீள்குடியமர்வுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. அப்பணிகளுக்கான நிதி மற்றும் பிற உதவிகள் இந்தின் வங்கி மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த திட்டத்திற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளது. இதனையடுத்து யாழ்ப்பாணம், திரிகோணமலை ஆகிய இரண்டு இடங்களில் வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது கிளை மற்றொரு இடத்தில் திறக்கப்படும்.

இதுதவிர இந்தியாவில் நகைக் கடன் வழங்குவதற்கென இந்தியன் வங்கி 15 தனி கிளைகளை துவங்க உள்ளதாக, இந்தியன் வங்கி பொதுமேலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக