புதன், 1 டிசம்பர், 2010

மாற்று திறனுடையவர்களும் இந்நாட்டு பிரஜைகள்.ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருப்பதற்கு


இலங்கையிலுள்ள மாற்றுத் திறன் உடையவர்களின் நல் வாழ்வுக்காக, எனது நிர்வாகத்தின் கீழ் சகல வசதிக ளும் செய்து கொடுக்கப்படும். பார்வையற்றவர்கள், பேச முடியாதவர்கள், மனநிலை வளர்ச்சி குறைந்தவர்கள், மற்றவர்களின் உதவியின்றி நடமாட முடியாதவர்கள் மற் றும் சாதாரண மக்களை விட மாறுபட்ட நிலையில் உள்ள வர்கள் அனைவருக்கும் தங்கள் வாழ்க்கையை தங்கு தடையின்றி நிம்மதியாக கழிப்பதற்கு தேவையான சகல வசதிகளும், வாழ்வாதாரங்களும், பயிற்சிகளும் கொடுக்கப் படும் என்று மஹிந்த சிந்தனை எண்ணக்கருவில் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருப்பதற்கு அமைய, அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருகிறது.
கல்வியமைச்சு, சுகாதார அமைச்சு, சமூகசேவைகள் அமைச்சு ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்புடன் இந்தப் பணி இன்று வெற்றிகரமான முறையில் நாட்டின் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மலையகம் என்ற பாரபட்சம் இன்றி, சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
மாற்றுத்திறன் உடைய பிள்ளைகளுக்கென ஒவ்வொரு பாட சாலையிலும் குறிப்பாக, தேசிய பாடசாலைகளில் ஒரு தனியான வகுப்பை ஒழுங்கு செய்து, நடத்த வேண்டும் என்று கல்வியமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய பிள்ளைகளுக்கு கல்வியை புகட்டுவதில் அனுபவமிக்க பயிற்சி பெற்ற ஆசிரியர்களிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டுள்ளது. எல்லாப் பாடசாலைகளிலும் மாற்றுத் திறனுடைய பிள்ளைகளுக்கான தனியான வகுப்புகளை நடத்த முடியாவிட்டாலும், ஒரு பிரதேசத்திலுள்ள ஒரு பாடசாலை யிலாவது இந்த வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
விடலைப் பருவத்தை கடந்து பெரியவர்களாக வளர்ந்துள்ள மாற்றுத்திறனுடையவர்களுக்கு விசேட தொழிற்பயிற்சிகளை அளிப்பதற்கான நிலையங்களும் இப்போது இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கையை மாவ ட்ட ரீதியில் அதிகரிப்பதற்கும் அரசாங்கம் முயற்சிகளை செய்து வருகிறது.
பார்வையற்றவர்களுக்கு தேவையான பிரேல் முறையில் புத்த கங்களை தயாரிப்பதற்கும், உயர்கல்வி பெறும் இத்தகைய மாற்றுத் திறன் உடையவர்களுக்கு ஒலிப்பதிவு கருவிகளை இலவசமாக கொடுத்து விரிவுரைகளுக்கு செவிமடுத்து, கல்வியில் தங்கள் முழுக்கவனத்தை செலுத்துவதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. பேச்சு திறனற்றவர்களுக்கு சமிக்ஞை பாஷையில் பயிற்சி அளிக்கும் திட்டமும் நாடெங்கிலும் செயற்படுத்தப்படுகின்றன.
தனியாக நடக்க முடியாதவர்களுக்கென சக்கர நாற்காலிகளை யும் அரசாங்கம், அமைச்சுக்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் மூலம் இன்று பெற்றுக் கொடுக்கின்றது. காலில் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கால்களை பொரு த்துவதற்கும் சிலருக்கு செயற்கை கைகளை பொருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கால்களை பொருத் திக்கொண்டு நடப்பதற்கும் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. இவ்விதம் மாற்றுத்திறனுடையவர்களின் வசதிக ளுக்காக திறைசேரி என்றுமே பணம் இல்லை என்று மறுப்பு தெரிவிப்பதே இல்லை.
மாற்று திறனுடையவர்களும் இந்நாட்டு பிரஜைகள் என்பதனால், அவர்களுக்கும் மற்ற பிரஜைகளுக்கும் இருக்கும் உரிமைகளையும், வசதிகளையும் பெற்றுக்கொடுக்க வேண் டும் என்ற இயற்கை நீதியை நெறியாக பயன்படுத்த வேண் டும் என்று ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கும், திணைக்களங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாற்றுத்திறனுடையவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் உட்பட, ஏனைய உயர்கல்வி நிலையங்களில் சேர்ந்து கொள்வதற்கும், வெளிநாட்டு புலமைப் பரிசில்களை பெற்று உயர் கல்வியை பெறுவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் தீர்மானித்திருப்பதனால், இனிமேல் மாற்றுத்திறனுடையவர்களின் வாழ்க்கையில் நிச்சயம் ஒளி நிரந்தரமாக பிரகாசித்துக்கொண்டிருக்கும்.
2010 டிசெம்பர் மாதம் 3ந் திகதியன்று, மாற்றுத்திறனுடையவர்களின் சர்வதேச தினத்தை இலங்கையில் சிறப்பாக கொண் டாடுவதற்கான ஒழுங்குகளை கல்வியமைச்சு செய்து வருகி றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக