செவ்வாய், 30 நவம்பர், 2010

நீரா ராடியா ஆடியோ டேப்புகளை தடை செய்யக் கோரி ரத்தன் டாடா வழக்கு

Ratan Tata and Nira Radia நீரா ராடியாவுடன் தான் பேசியதன் ஆடியோ பதிவுகளை மீடியாக்கள் வெளியிடுவதற்குத் தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரத்தன் டாடா மனு தாக்கல்செய்துள்ளார்.

இதுகுறித்து ரத்தன் டாடா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தானும், ராடியாவும் பேசியதன் ஆடியோ பதிவுகளை மீடியாக்கள் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக மீடியாவுக்கு ஆடியோ டேப்புகள் கசிவதை தடுத்து நிறுத்துமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அரசியல் சட்டத்தின் 32வது பிரிவின் கீழ், இது வாழும் உரிமையைப் பறிக்கு் செயலாகும். இந்த சட்டப் பிரிவில் கூறப்பட்டுள்ள தனி மனித சுதந்திரத்தை பறிக்கும்வகையில் இது உள்ளது.
  Read:  In English 
அரசுதான் இந்த தொலைபேசிப் பேச்சுக்களை பதிவு செய்துள்ளது. அரசுடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அரசு குறிப்பிட்ட ஒரு விஷயத்திற்காக செய்த பதிவை மீடியாக்களுக்கு கசிய விடுவது சட்டப்படி குற்றமாகும்.

ஒவ்வொரு குடிமகனின் ரகசியத்தையும், தனி மனித சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே எனது தனி மனித சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக