வெள்ளி, 19 நவம்பர், 2010

ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக சற்றுமுன்னர் தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கான சத்தியபிரமாணத்தை செய்துகொண்டார். இவ்வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்று இன்று இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பிக்கின்றார்.
ஜனாதிபதிக்கு நேரடியாக வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக 40 இராஜதந்திரப் பிரதிநிதிகள் அடங்கலாக 150 பிரமுகர்கள் இலங்கை வந்துள்ளனர். காலி முகத்திடலில் முப்படையினரினதும் பொலிஸாரினதும் அணி வகுப்பு மரியாதையும் மற்றும் போர்த்தளபாட பேரணியும் நடைபெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக