செவ்வாய், 30 நவம்பர், 2010

இளவாலை, வித்தகபுரத்தில் ஒரு மாதத்திற்குள் மீள்குடியேற்றம

அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள
- விநாயகமூர்த்தி முரளிதரன்
யாழ். குடா நாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த இளவாலை மற்றும் வித்தகபுரம் பிரதேசங்களில் அடுத்துவரும் ஒரு மாத காலத்திற்குள் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கேட்டிருந்த வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், யாழ்ப்பாணம் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் வசித்த மக்களை கட்டம் கட்டமாக மீள்குடியேற்றி வருகிறோம்.
இதன்படி இளவாலை வட மேற்கு, வித்தகபுரம், இளவாலை வடக்கு ஆகிய பகுதிகளில் ஒருமாத காலத்தில் மக்கள் மீள்குடியேற்றப்பட உள்ளனர். இதேபோன்று மயிலிட்டியில் கண்ணி வெடி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதோடு விரைவில் அங்கும் மீனவ குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவர். மயிலிட்டி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளது. அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள மக்களை கட்டம் கட்டமாக மீள்குடியேற்ற பாதுகாப்பு அமைச் சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார். மயிலிட்டியில் மக்களை மீள் குடியேற்று வதற்காக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு யாழ். இராணுவத்தளபதியுடன் பேசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இங்கு மக்களை மீள் குடியேற்ற ஏற் கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறுக்கீடு: மயிலிட்டி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருப்பதாகக் கூறுவது தவறான தகவல் என அ. விநாயமூர்த்தி எம். பி. கூறினார்.
பதில்: இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் மயிலிட்டி பாதுகாப்பு வல யத்திலே இருக்கிறது. அதனை அண்டிய கிராமங்களான இளவாலை வட மேற்கு, வித்தகபுரம், இளவாலை வடக்கு ஆகிய பகுதிளில் மக்கள் மீள் குடியேற்றப்பட உள்ளனர். அதே போன்று மயிலிட்டியிலும் மக்களை மீள் குடியேற்றுவதில் எதுவித தடையும் இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக