| இந்தியர் ஒருவர் எட்டு கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கண்டிப் பிரதேச மக்களிடம் குறித்த இந்தியர் இவ்வாறு நிதி மோசடி செய்துள்ளார். |
| பிரமிட் முறை மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டதன் மூலம் இந்தப் பணம் திரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மக்களின் பணத்தை மோசடி செய்த குறித்த நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மோசடியில் பணத்தை இழந்த சுமார் 25 பேர் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த நிறுவனத்தில் அங்கத்துவம் பெற்றுக் கொள்வதற்காக நபர்களிடம் 14,500 ரூபா பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சந்தேக நபர் மொத்தமாக 5000 பேரிடம் மோடி செய்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளன. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக