ஞாயிறு, 14 நவம்பர், 2010

கணக்கெடுக்கிறது தி.மு.க.,எந்த ஜாதி எந்த மதத்துக்கு எவ்வளவு ஓட்டு

சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதன் முறையாக மாவட்ட, நகர, ஒன்றிய வாரியாக ஜாதி ஓட்டுகள் மற்றும் சிறுபான்மை ஓட்டுகள் குறித்த துல்லிய கணக்கெடுப்பை நடத்த தி.மு.க., நிர்வாகிகளுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக அச்சிடப்பட்ட படிவஙகள் மாவட்ட நிர்வாகிகளுக்கு வந்துள்ளன.

தமிழகத்தில் அடுத்தாண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 1991 சட்டசபை தேர்தல் முதல், ஜாதி ரீதியான அமைப்புகள் அரசியல் கட்சியாக உருப்பெற்று தேர்தலில் போட்டியிடத் துவங்கியுள்ளன. வரும் சட்டசபை தேர்தலை குறிவைத்து பல ஜாதி அமைப்புகள், அரசியல் கட்சியாக அவதாரம் எடுக்கத் துவங்கியுள்ளன. 1991க்கு பிறகு தமிழகத்தில் தொடர்ந்து தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பில் இருந்தாலும், சட்டசபை தேர்தலில் தொடர் வெற்றி பெற முடியவில்லை. தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் மாறி மாறித்தான் வெற்றி பெற்றுள்ளன. 2006 சட்டசபை தேர்தலில் மெஜாரிட்டிக்கும் குறைந்த இடங்களை பெற்ற தி.மு.க., முதன் முதன்முறையாக காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. வரும் சட்டசபை தேர்தலில் முழு பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடிக்க தி.மு.க., மேலிடம் காய் நகர்த்தி வருகிறது.

முதல் கட்டமாக மாநிலத்தில் சீரமைக்கப்பட்டுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் அடங்கியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் படி, ஜாதி, சிறுபான்மை ரீதியாக உள்ள ஓட்டுகள் பற்றி கணக்கெடுப்பு நடத்த தி.மு.க., நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, தி.மு.க., மேலிடத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள பிரத்யேக விண்ணப்ப படிவங்கள் மாவட்ட நிர்வாகிகளுக்கு சென்னையில் இருந்து வந்துள்ளன. எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., தொகுதி விவரம், ஓட்டுச்சாவடி எண், பாகம் எண், மொத்த வாக்காளர்கள், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள், ஜாதி ரீதியாக உள்ள வாக்காளர்கள் எண்ணிகை (சதவீத கணக்கில்) ஆகிய விபரங்கள் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய, நகர, கிளை வாரியாக சிறுபான்மை மற்றும் ஜாதி ரீதியாக உள்ள ஓட்டுகள் குறித்து துல்லியமான விவரங்களை வீடு வீடாக சென்று தி.மு.க., நிர்வாகிகள் சேகரித்து வருகின்றனர். வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலிடத்துக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும் என, நிர்வாகிகளுக்கு தி.மு.க., மேலிடம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

சட்ட சபைத் தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்குமா? அல்லது பாதகமாக இருக்குமா? என்பது குறித்து உளவுத்துறை போலீசார் ரகசிய சர்வே எடுத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக வாக்காளர் பற்றிய புள்ளி விவரங்களை அவர்கள் சேகரிக்கத் துவங்கியுள்ளனர். தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க.,- வி.சி., ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க.,- ம.தி.மு.க., இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும் வைத்து, தே.மு.தி.க., மற்றும் பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளை தனி அணியாகவும் வைத்து, கடந்த எம்.பி., தேர்தலில் சட்டசபைத் தொகுதிவாரியாக அவர்கள் பெற்ற ஓட்டுகள், ஓட்டு சதவீதம் ஆகியவற்றையும், சட்டசபைத் தொகுதியின் மொத்த ஓட்டுகள் (மறுவரையறுக்கப்பட்ட தொகுதி வாரியாக) ஆகியவற்றையும் உளவுத்துறை போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.

"ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் ஜாதிரீதியாக எவ்வளவு வாக்காளர் உள்ளனர்?' என்பதையும், அவர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பார்களா, தொகுதியில் ஆளுங்கட்சிக்கு சாதக, பாதக சூழ்நிலை என்ன என்ற புள்ளி விவரங்களையும் உளவுத்துறை போலீசார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர். இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதிவாரியாக அறிவிக்கப்பட்ட அரசு திட்டங்களில் எவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை? என்றும், அங்குள்ள தேவைப்படும் அவசர அடிப்படை தேவைகள் என்ன என்பது குறித்தும் விவரங்கள் உளவுத்துறை போலீஸ் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
குட்டி - சென்னை,இந்தியா
2010-11-14 19:18:50 IST
நாங்க எல்லாம் ஒன்ன இருக்க ஆசைபடுறோம் ... நீங்க எங்களை பிரிக்க ஆசைபடுரிங்க... நீ உண்மையான தலைவன் அல்ல ..... உன்னை விட தீவிரவாதியே மேல்..........
ராஜா - திருச்சி,இந்தியா
2010-11-14 17:39:30 IST
ஆமா!! எல்லோரும் யோக்கியங்கள் மு.கவை ஜாதியால் பிரிப்பவர் என்பது போல துடிகின்றீங்க.. நீங்கள் ஜாதியில் இன்னும் மூழ்கி இருப்பதால்தான் அவரும் வியாபாரத்திற்க்காக ஜாதி கத்தரிகாயை பார்க்கிறார். நீங்கள் அனைவரும் ஜாதியை விட்டுவிட்டால் அவரும் விடப்போகிறார்... முதலில் உங்களை பாருங்கள்.....
குசும்பு குப்பா - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-14 16:53:38 IST
அரசியல்வாதிகளை நம்பி மோசம் போகாதே....
எ.JEYASEELAN - kuwait,இந்தியா
2010-11-14 15:38:47 IST
தமிழக மக்களே!! thamil நாட்டை கருநாநிதி குடும்பத்திர்கே பட்டா போட்டுக்கொடுதுவிடுங்கள்.அவர்களே தமிழ் நாட்டை ஆளட்டும். ஏன் என்றால், மீண்டும் திமுக தான் ஆட்சிக்குவரும் என்று ஸ்டாலின் சொல்கிறார்.ஏன் தேர்தல்.வாழ்க! கருணாநிதி குடும்பம்.....
மா.கதிர்வேல் - தோஹாகத்தார்,இந்தியா
2010-11-14 15:30:13 IST
ஜாதி கணக்கு எடுப்பது தேவை இல்லாததொன்று ஒற்றுமையாக இருக்கும் தமிழக மக்களின் மனதை புண்படுத்துவதாக இருக்கும் ஜாதி மதம் பார்க்காமல் ஆட்சி செய்து வரும் முதல்வர் கருணாநிதி அவர்களே ஜாதி கணக்கு எடுப்பதை நிருத்திக்கொண்டால் நல்லது...
anniyan - chennai,இந்தியா
2010-11-14 14:56:49 IST
சாதிய ஒழிக்கிறேன், தீண்டாமைஐ அகற்றுகிறேன், பெரியாரின் தம்பி என்றெல்லாம் தற்பெருமை பேசி தாழ்த்தபட்டவர்களின் ஓட்டை வாங்கிஅவர்களுக்கு சமஉரிமை வாங்கித்தருகிறேன் என்று உறுதியளித்து இன்று ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிறகு சாதியெய் பற்றி சிந்திக்கும் நீ பகுத்தறிவு உள்ளவனா. ஐயஹோ வெட்கம். பெரியாரின் ஆவி உன்னை மன்னிக்காது....
Thamizhan - CHENNAI,இந்தியா
2010-11-14 14:51:33 IST
Dear Kamaraj, Wish our society becomes really forward thinking and defeats all caste minded approach to the public life....
santhosham - thanjavur,இந்தியா
2010-11-14 14:23:47 IST
மொத்த ஜாதிகள் எவள்ளவு என்று கணக்கிட்டு அதன் மூலம் தேர்தல் வைத்து முதலில் பர்க்க வேண்டும்...
wang - chennai,இந்தியா
2010-11-14 12:49:41 IST
எங்கள் தன்மான தலைவர் கலைஞர் ... தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றோரின் கனவுகளை கஷ்டப்பட்டு எப்படி நிறைவேற்றுகிறார் வாழ்க உன் புகழ் ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;...
குமார் - madurai,இந்தியா
2010-11-14 12:47:29 IST
ஜாதியை முன் நிறுத்தும் இவர்களுக்கு நம் வாக்கின் மூலம் சாட்டையடி கொடுப்போம்.. இளையர்களே உறுதி எடுங்கள்...
TAMILAN - chennai,இந்தியா
2010-11-14 12:42:50 IST
திரு மு க அவர்கள் இனி எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் பெரியார் பெயரை சொல்ல அருகதை இல்லை.கொஞ்சமாவது சிந்தித்து செயல் ஆற்றுவது நல்லது...........
ரமேஷ் - சிங்கப்பூர்,இந்தியா
2010-11-14 12:14:30 IST
பெரியார் , அண்ணா , காமராஜர் .... பாரதி எல்லாம் சீக்கிரமா செத்து போய்ட்டாங்க....!!!! ஹ்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் பெரு மூச்சுதான் விடலாம்.....!!!!!?????...
arangaraasan - Karur,இந்தியா
2010-11-14 11:36:11 IST
மிகவும் அருமையான யோசனை..சாதிவாரி கணக்கு எடுத்த பின்தான் முன்னேற்ற திட்டங்களால் எந்த சாதி எவ்வளவு முன்னேற்றம் அடைந்து உள்ளது என்று தெரியும்..நடத்துங்கள் கலைஞரே.. உமக்கு எமது வாழ்த்துக்கள்.....
ராஜன்.S - Chennai,இந்தியா
2010-11-14 11:30:20 IST
"சாதி மத பித்து என்னும் சனி ஒழிந்தால்தான் சமத்துவம் என்னும் வெள்ளி முளைக்கும்" என்று கூறிய கருணாநிதி ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கு எடுப்பதன் மர்மம் என்ன? தேர்தல் பயத்தினாலா?...
சாமி - MUSCAT,ஓமன்
2010-11-14 11:07:32 IST
மீண்டும் ஜாதி பேரை சொல்லி தமிழக மக்களை அழிக்க பார்க்கிறார் இந்த முட்டாள் முக. தமிழ் நாட்டில் எல்லா பேருந்து களிலும் என்னமோ இந்த ஆளோட பெயரை போட்டு நிறைய போஸ்டர் ஒத்திருக்கும் பார்த்திருக்கிறீர்களா மக்களே "சாதி மத பித்து என்னும் சனி ஒழிந்தால்தான்" -- இதுக்கு முதலில் என்ன அர்த்தம் என்று சொல்ல சொல்லுங்கள்.....................
பாரதி - கோல்ஹாபூர்,இந்தியா
2010-11-14 10:49:01 IST
எங்கள் தன்மான தலைவர் கலைஞர் ...... புரட்சி கவிஞர் பாரதி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றோரின் கனவுகளை கஷ்டப்பட்டு இப்போது தான் நிறைவேற்றுகிறார் ..... வழி விடுங்கள் அவரது சாதி பிரிவினை வேலைக்கு ......
muru - singapore,சிங்கப்பூர்
2010-11-14 10:43:34 IST
பழைய கரும்புள்ளி, செம்புள்ளி குத்தும் பழக்கமிருந்தால், இவர்களுக்கு அதைத்தான் தண்டனையாக கொடுக்க வேண்டும்....
காமராஜ் - US,இந்தியா
2010-11-14 10:38:31 IST
Hi Tamilazhan, I agree with ur statement. But the question is still in this era "Do you want caste system should exist or not?" my answer is simple...In my father's period (1 or 2 generation before) intercaste marriage is 100%UNACCEPTABLE...now we can understand about intercaste marriage..we can say 50:50. In ur son/daughter generation definitely it will less...let's go ahead......
சிங்கம்... - தோஹா.கத்தார்,இந்தியா
2010-11-14 09:52:58 IST
படு பாவிகளா இன்னமும் ஏன்யா நாட்டை கெடுக்க நினைக்ரின்கா பாவிகளா பாவாம் மக்கள்.. .வாழவிடுங்க ..மக்களை உங்களுக்கு நெறய சொத்து இருக்குல்ல போங்கா எங்காச்சும் வெளிநாட்டுளா போய் இருங்கையா ..நாட்டைவிட்டு முதல்ல போங்கா.....
சில்லு வண்டு - துபாய்குறுக்குதெரு,இந்தியா
2010-11-14 09:46:06 IST
நாடு வெளங்குன மாறித்தான்;;;;;;;;;;;;;;;;;;;;;ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லி கொடுத்த பள்ளியில் இனி ஜாதிகள் உள்ளதடி பாபா;;;;;;;;;;;;;;;;;மற்று நம்ம நாட்டில் எல்லாருக்கும்;;;;;;;;;;;;;;;; நம்ம வரி பணத்தில் இலவசம் கிடைக்குமடி பாப்பா;;;;;;;;;;;;;;;;;;;என்று நம்ம பாட புஸ்தகத்தில் மாற்றி எழுதணும்;;;;;;;;;;;;அப்பத்தான் நம் நாட்டில் படித்து வரும் பள்ளி குழந்தைகள் எல்லாம் ஒரு ஜாதி வெறியோடு பள்ளிகளை விட்டு வெளியே வரும்;;;;;;;;;;;;;;...
Thamizhan - Chennai,இந்தியா
2010-11-14 09:22:32 IST
Someone citing Bharathi( who said no caste in human society ),but even now caste and caste systems are very much alive and aggressive more than everbefore,Then what is wrong in taking caste and religion survey.Is there any one community which can come out in open that they would call themselves as only Hindu and open to marriages suiting to their educational and economic conditions only.Then the society can be called forward .Where as today............
சேதுபதி - chennai,இந்தியா
2010-11-14 08:39:25 IST
சரி.இந்த கணக்கு எடுப்பவர்களில் மெஜாரிட்டி எந்த ஜாதியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்!!!!!.இதப் படிக்கும் போது கோவம் வருதுல்ல.அத மாதிரி தான் இருக்கும் இருக்கும் எங்களுக்கும்....
தமிழ் பக்தன் - தமிழ்நாடு,இந்தியா
2010-11-14 08:18:30 IST
இன்னும் இந்த தாத்தாவுக்கு ஆசையா, தமிழ் மக்களை பாத்தா இவ்வளவு முட்டாளா உங்களுக்கு தோணுதா....
Tamilanthirumal - Chennai,இந்தியா
2010-11-14 07:46:07 IST
Instead begging votes via d name of caste n religion y dnt politicians pluck their own votes by doing welfare to people... If u do good, u ll get votes also n communalism also ll get disappear soon....
a.susee - rajapalayam,இந்தியா
2010-11-14 06:05:27 IST
அடுத்து புத்திசாளிகளுக்கான போட்டி தமிழக மக்கள் vs உலக ந/ஒன பணக்கார குடும்பம் செயிக்கபோவது யாரு நீயா நானா....
sathish - cbe,இந்தியா
2010-11-14 05:47:43 IST
""ஜாதிகள் இல்லையடி பாப்பா"" ,என்று பாடிய பாரதியாரை வைத்து காசு பார்க்கும் இந்த கேடு கெட்ட தலைவரை என்ன சொல்ல,,,,,,, ""ஜாதிகள்""" ஒழிக்க வேண்டும்,,,,,ஒழிய வேண்டும்,,, என்று வாயிக்கு வாய் பேசிய தலைவர்,, இப்போது ஜாதிகளை ஊக்குவிக்கும் அளவிற்கு தரம்,குணம்,மனம் ,, தாழ்ந்து போயிருப்பது கண்டு வெட்கம்,,, எப்படியும் எனக்கு தேவை பதவி என்று இன்னும் இந்த தள்ளாதவயதிலும்,,,, கேவலம் பணம் பதவி,சொத்து, சுகம் என அலையும் இந்த தலைவரை பார்க்க கேலியாகதான் இருக்கிறது,,,,,, எல்லா புது புது காளான் கட்சி தலைவர்களும் இதையே பாடினாலும் இவர் எழுவது வருடமாக அரசியலில் ஊறி வரும் தலைவர் ,,,,,,மக்களின் நலத்தில் ,,வாழ்வில் அக்கறை கொண்டவர்,,,,,, இப்படி தன் தரம் தாழ்ந்து பின்னும் பின்னும் மக்களை ஜாதி பெயரை சொல்லி சொல்லியே முட்டாள் ஆக்குவதும் ஏதோ தான் தான் அவர்களின் தேவனாகக ஒரு மாயையை தோற்றுவிப்பதும்,,,, கேவலம் அய்யா,,,,, கேவலம்,,,,,,முதிர்ந்த தலைவர் இப்படி செய்து,,,, வரும் இளைய சமுதாயத்தை ஜாதி வெறியர்களாக ,,,,,,மூடர்களா ஆக்கலாமா????வரும் காலத்தை ஜாதி பித்து ஒழிய வேண்டும் என்றால் தயவு செய்து இது போன்ற "ஜாதி"" என்ற வார்த்தையையே நம் தமிழ் அகராதியில் இருந்து ஒழித்து விடுங்கள்,,, எல்லோரும் ஒரு குலம் எல்லோரும் ஒரு இனம் என்ற தாரக மந்திரத்தை அரசு பறை சாற்றி பாரதியின் கனவை நிறைவேற்ற வேண்டும் ,,,...
சங்கர் - திருப்பூர்,இந்தியா
2010-11-14 05:11:36 IST
இந்த முறை திமுக ஆட்சியை பிடிக்காது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாடே திமுகவின் சொத்தாக மாறி விடும் மக்கள் சிந்தித்து வாக்கலிக்க வேண்டும்...
தமிழ் நேசன் - தோஹா,கத்தார்
2010-11-14 02:38:52 IST
இப்படி தெரிஞ்சா நம்ம ஊர்ல மாசா மாசம் தேர்தல் வைக்கலாம் போல. தேர்தல் ந மட்டும் எங்க இருந்து தான் இவ்ளோ அக்கறை வருமோ.. ஆனா வோட்டு நு ஒன்னு மட்டும் இல்லனு வச்சுகொங்க மக்களோட நிலைமை ய கற்பனை கூட பண்ணி பாக்க முடியல...
தமிழன் - சென்னை,இந்தியா
2010-11-14 00:35:25 IST
ஐயோ .......இந்த அரக்கர்களின் அட்டகாசத்திற்கு எல்லையே இல்லையா? வள்ளுவனும், பாரதியும் , பெரியாரும் வாழ்ந்த நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு...... இதுவா பெரியாரின் கனவு???????...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக