ஞாயிறு, 7 நவம்பர், 2010

அசினை அடுத்து வில்லங்கத்தில் திவ்யா



          இலங்கை சென்ற விவகாரத்தில் அசின் பிரச்சனை இன்னும் தீராத திருநாளா இருக்கு. இப்போது காவிரி பிரச்சனையால் திவ்யா ஸ்பந்தனாஸ் விவகாரமும் வில்லங்க விளக்கேற்ற தொடங்கிடுச்சு.



தமிழில் ‘குத்து’ படத்தின் மூலம் ரம்யாவாக அறிமுகமான திவ்யா, பொல்லாதவன் படத்தில் இருந்து திவ்யா ஸ்பந்தனாஸ் என்னும் தனது உண்மையான பெயருக்கே மாறினார். பொல்லாதவன் படம் தந்த வெற்றிக்கு பின் வாரணம் ஆயிரம் சொல்லும்படியாக அமைந்தது. இந்தப் படத்தில் சிம்ரன், சமீரா ரெட்டி ஆகியோருக்குதான் முதன்மையான கதாபாத்திரம் என்றாலும் அவர்களுடன் சைலண்டாக போட்டி போட்டு தனக்கென தனியிடத்தை பிடித்திருந்தார் திவ்யா.

தனது முந்தைய படத்தின் நாயகிகளை மீண்டும் தனது அடுத்தப் படத்திலும் நடிக்க வைப்பது கௌதம் மேனனின் வழக்கம். வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு சமீரா ரெட்டியை தனது ‘நடுநிசி நாய்கள்’ படத்தில் நடிக்க வைத்துள்ளார். அதேபோல விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் கன்னட ரீமேக்கில் திவ்யாவை நடிக்கவைக்க போகிறார் மேனன். இதுபோக கௌதமின் அடுத்தத் தமிழ் படத்திலும் திவ்யா நடிக்கலாம் எனவும் திரைவட்டாரத்தில் கிசுகிசுக்கப் பட்டுவருகிறது.  இந்த விவகாரமாகத்தான் வில்லங்கத்தில் மாட்டியுள்ளார் திவ்யா.    
ஏற்கனவே காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ் - கன்னட திரையுலகினர் நடத்திய போராட்டதின்போது கன்னட நடிகர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் திவ்யா. அப்போதிலிருந்தே  திவ்யாவுக்கு தமிழ் படங்களில் நடிக்க எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் அவர் தொடர்ந்து நான்கைந்து படங்கள்வரை நடித்துவிட்டார்.

இந்நிலையில் இப்போது திவ்யாவுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடிகள் பறக்கத்தொடங்கியுள்ளன. இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கண்ணன் ஒரு அறிக்கையே வெளியிட்டும் உள்ளார்.

அதில்... “காவிரி பிரச்சனையில் தமிழர்கள் நலனைக் கருதாமல் எதிராக செயல்பட்ட திவ்யாவை தமிழில் நடிக்க வைக்கக் கூடாது. ஏற்கனவே கெளதம் மேனன் திவ்யாவை வாரணம் ஆயிரம் படத்திற்கு ஒப்பந்தம் செய்தபோதே எதிர்ப்பு தெரிவித்தோம். இனி அவரை தனது படத்தில் நடிக்க வைக்க மாட்டேன் என்று கெளதம் உறுதியளி்த்தார். அதனால்தான் அமைதியாக இருந்தோம்.

ஆனால்,  இப்போது மீண்டும் திவ்யாவை தனது புதிய படத்திற்கு தேர்வு செய்துள்ளார் கெளதம் மேனன். இதை அனுமதி்க்க மாட்டோம். கெளதம் மேனன் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்,”  என்று ஆவேசப்பட்டுள்ளார் கண்ணன். (அசின் விவகாரம்,  பிரபு தேவா - நயன் தாரா பிரச்சனையை தொடர்ந்து திவ்யா விஷயத்தில் வில்லங்கம் செய்கின்றது இந்து மக்கள் கட்சி) 

ஆனால், அவர்களின் எதிர்ப்புக்கு பதில் அளிக்கையில்,“ நான் இந்தப் படத்தில் நடிப்பேனா, இல்லையா என்பதை கெளதம்தான் கூற வேண்டும்” என்று கூலாக கூறுகிறார் திவ்ஸ்.

இதெல்லாம் சினிமாவில் சாதாரணமப்பா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக