சனி, 20 நவம்பர், 2010

Asin.இந்தியில் கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும்

Asin and Vijayசல்மான் கானுடன் படுக்கையறைக் காட்சியில் தான் நடித்துள்ளதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்றும், ரெடி படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் இடம் பெறாது என்றும் நடிகை அசின் தெரிவித்தார்.

தென்னிந்திய மொழிப் படங்களில் நடிகை அசின் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்தார். ஆனால் இந்தியில் கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும் என்பதால் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் ஓரளவு கவர்ச்சியாக நடித்தார்.

ஆனால் அதற்கு அடுத்த படமான ரெடியில் அசினின் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது என்கிறார்கள்.

முத்தக் காட்சி, படுக்கையறைக் காட்சிகளில் அசின் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்தச் செய்திகள் பரவியதும், அவற்றை மறுத்து பேட்டியளித்தார் அசின்.

அவர் கூறுகையில், "கவர்ச்சிக்கும் கிளாமருக்கும் வித்தியாசதம் இருக்கிறது. நான் சற்று கிளாமராக ரெடியில் நடித்துள்ளேன். ஆனால் படுக்கையறைக் காட்சிகளிலெல்லாம் நடிக்கவில்லை. காவலன் படத்தில் கூட கிளாமராக வந்துள்ளேன் பாடல் காட்சிகளில். அதற்காக அதை ஆபாசம் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக