திங்கள், 29 நவம்பர், 2010

இலங்கையிலிருந்து வெளிநாட்டவர் 600 போ் வெளியேற்றம்: 33 பேருக்குத் தடுப்புக் காவல்


இலங்கையிலிருந்து 600 வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் அதற்கு மேலதிகமாக 33 வெளிநாட்டவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா  தெரிவிக்கின்றார்.
இவ்வருடம் ஆரம்பம் தொட்டு வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சீனா, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாட்டவர்கள் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து விட்டு வீசா காலாவதியான பின்னும் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த காரணத்தினாலேயே அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்கியிருக்கும் பலர் வர்த்தகம் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் பல்வேறு காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் 33 போ் தற்போதைக்கு மிரிஹானை பொலிசில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களைத்  தேடி தற்போதைக்கு விசேட சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக