வெள்ளி, 19 நவம்பர், 2010

தாய்லாந்தில் இலங்கை தமிழர்கள் உட்பட 50 பேர் கைது

தாய்லாந்தில் நேற்று முன்தினம் 30 இலங்கை தமிழர்கள் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தின் சொங்க்லா பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது, மொத்தமாக கைது செய்யப்பட்ட 50 பேரில் 30 தமிழர்களும் உள்ளடங்குவதாக த ஆசியன் ட்ரிபியூன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்கள் தற்போது பேங்கொக்கில் உள்ள குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் அவர்கள் நீதிமன்ற உத்தரவின் பின்னர், நாடுகடத்தப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.
தாய்லாந்து தேசத்து குடிவரவு மற்றும் அடிப்படை சட்டங்களை மீறியதாக தெரிவிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் அனைவரும் தாய்லாந்தில் இருந்து கனடாவுக்கு சட்டவிரோதமாக தப்பி செல்வதற்கு தயாராக இருந்தார்கள் என புலனாய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கனடாவின் அகதிகளுக்கான சிறப்பு தூதுவர் வார்ட் எல்கொக், தாய்லாந்து அரச தரப்புடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் காணப்பட்ட இணக்கப்பட்டின் கீழேயே அண்மைக்காலமாக தாய்லாந்தில் வைத்து இலங்கையர்கள் கைது செய்யப்படுவதாக த ஆசியன் ட்ரிபியூன் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக