செவ்வாய், 16 நவம்பர், 2010

டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து 61 பேர் பலி

டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 61 பேர் பலியாயினர். மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர்.

கிழக்கு டெல்லி லட்சுமி நகரில் உள்ள லலிதா பார்க் பகுதியில் உள்ள இந்தக் கட்டடம் நேற்றிரவு இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 61 பேர் பலியாயினர். மேலும் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பல வீடுகளைக் கொண்ட இந்தக் கட்டடம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளே ஆகிறது. சமீபத்தில் பெய்த கனமழையின்போது யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்தப் பகுதி வெள்ளத்தால் சூழ்ந்தது.

இதனால் இந்தக் கட்டடத்தின் அடித்தளம் பலவீனமடைந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந் நிலையில் கட்டடத்தின் அடித்தளத்தில் நீண்ட நாள்களாக தண்ணீர் தேங்கியிருந்ததோடு, அங்கு கூடுதலாக இன்னொரு தளம் கட்டும் பணியும் நடந்து வந்தது.

இந் நிலையில் அந்தக் கட்டம் இடிந்து விழுந்துள்ளது. இதில் தங்கியிருந்த பெரும்பாலானவர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளிகளின் குடும்பத்தினர் ஆவர். இந்தக் கட்டடம் அம்ரித் சிங் என்பவருக்குச் சொந்தமானது.

இந்த விபத்து குறித்து விசாரணைக்கு டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் உத்தரவிட்டுள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக