யாழ்ப்பாணம், சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள நிலாவரைப் பகுதி வர்த்தகர் ஒருவர் தமது வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரவு வீடு திரும்பிய வேளை அவரிடமிருந்த சுமார் 21/2 லட்சம் கொள்ளையிடப்பட்டுள்ளது. |
நிலாவரைப் பகுதியிலுள்ள மதுபானக்கடை உரிமையாளரின் பணமே இவ்வாறு சூறையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இத் துணிகரக் கொள்ளை கடந்த சனிக்கிழமை சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் வீதியிலுள்ள கொத்தியாலடி சுடலைக்கருகில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது: பிரஸ்தாப வர்த்தகர் அன்றையதினம் இரவு மோட்டார் சைக்கிளில் பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரைப் பின்தொடர்ந்து மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் மூவர் வந்துள்ளனர். சுடலைக்கு அருகில் வந்ததும் தலைக்கவசங்கள் அணிந்திருந்த மூவருள் ஒருவர் தடியொன்றினால் தலையில் தாக்கியுள்ளார். அதையடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்திய வர்த்தகரைத் தள்ளிவிட்டு அவரிடமிருந்த பணம் முழுவதையும் பறித்துக்கொண்டு மூவரும் தப்பியோடி விட்டனர். அது குறித்து வர்த்தகர் சுன்னாகம் பொலிசில் முறையிட்டுள்ளார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக