புதன், 17 நவம்பர், 2010

தம்புள்ளையில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் துப்பாக்கியுடன் 16 வயதான மாணவர் கைது!

இலங்கையில் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் ரிவோல்வர் துப்பாக்கியுடன் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தம்புள்ளை – கலேவல்ல பொலிஸார் 16 வயதான இம்மாணவரைக் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவர் துப்பாக்கியை 4,500 ரூபாவுக்கு விற்கவிருந்த வேளையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் அம்மாணவர் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக