யாழ் தென்மராட்சிப் பிரதேச கைதடி வடக்கில் பூட்டப்பட்டிருந்த வீட்டை உடைத்து வீட்டிலிருந்த சுமார் 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான நகை மற்றும் பெறுதியான பொருட்கள் களவாடிச் செல்லப்பட்டுள்ளன. |
குறித்த வீட்டின் உரிமையாளர்கள் வேலைக்குச் சென்றிருந்த சமயம் பார்த்து திருடர்கள் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உட்புகுந்துள்ளனர். நேற்று செவ்வாய்க் கிழமை இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது வீட்டிலிருந்த 26பவுண் நகைகளும் 60 ஆயிரம் ரூபா பெறுமதியான நவீன கைத்தொலைபேசி ஒன்றும் திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸில் முறைப்பாடு கொடுத்துள்ளனர். இதேவேளை சம்பவம் நடைபெற்றபோது குறித்த வீட்டிற்கு அருகில் நடமாடிய சிலரை தனக்குத் தெரியும் என அவ்விடத்தில் நின்ற முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுத்துள்ளார். இந்த தகவல்களின் அடிப்படையில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக