வியாழன், 4 நவம்பர், 2010

ஐ.பி.எல். அமைப்பின் தலைவராக இருந்த லலித்மோடி வாங்கிய 100 கோடி அரண்மனை வீடுகள் பறிமுதல்!


ஐ.பி.எல். அமைப்பின் தலைவராக இருந்த லலித்மோடி நிதி முறைகேடு தொடர்பாக அதன் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கிரிக்கெட் வாரிய அமுலாக்க விசாரணைக்குப் பயந்து அவர் தலைமறைவாக உள்ளார். அவர் மீது ரூ.450 கோடிக்கு மேல் மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.

லலித்மோடி 2007ஆம் ஆண்டு அரசுக்குச் சொந்தமான பாரம்பரியமிக்க அரண்மனை வீடுகளை விதிமுறைகளை மீறி வாங்கினார். ரூ.9 லட்சத்துக்கும், ரூ.21 லட்சத்துக்கு லலித்மோடி மற்றும் அவரது மனைவி மினால் மோடி பெயரிலும் வாங்கப்பட்டது.
வசந்தரா ராஜே, முதல்- மந்திரியாக இருந்த போது இது வாங்கப்பட்டது. வசந்த ராஜே மோடிக்கு நெருக்கமானவர்.இந்த நிலையில் லலித் மோடியின் பாரம்பரியமிக்க 2 அரண்மனை வீடுகளுக்கு ஜெய்ப்பூர் மாநகராட்சி ‘சீல்’ வைத்துள்ளது. அரசே அதை ஏற்றுக்கொண்டது. அந்த 2 வீடுகளின் தற்போதை மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும்.
இந்தச் சொத்துக்களை அரசே தன்னிடம் வைத்துக் கொள்ள முடிவு செய்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி சொத்துக்கள் வாங்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆனால் மோடியின் நிறுவனம் இதை மறுத்துள்ளது. அனைத்து விதிகளுக்குட்பட்டுத்தான் 2 அரண்மனை வீடுகளும் வாங்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக