வெள்ளி, 12 நவம்பர், 2010

பகவதியம்மன் கோயிலில் கொள்ளை முயற்சி-10 கிலோ தங்க நகைகள் தப்பியது

சாமியார்மடம்: குமரி மாவட்டத்தில் உள்ள பகவதியம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதில் கோவிலுக்குச் சொந்தமான 10 கிலோ தங்க நகைகள் தப்பியது.

குமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே வாள்வச்சகோஷ்டத்தில் 900 ஆண்டு பழமை வாய்ந்த பகவதியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.

அங்கிருந்த பெரிய இரும்பு உண்டியலை உடைக்க கொள்ளை கும்பல் முயன்றுள்ளது. முடியாததால் கருவறை கதவை உடைக்க முயற்சி செய்துள்ளது. அதையும் உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் தப்பி சென்று விட்டனர்.

நேற்று கோயிலுக்கு பூஜை செய்ய வந்த பூசாரி கோயில் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். கோயிலுக்கு சொந்தமான 10 கிலோ தங்கம் கல்குளம் தேவசம்போர்டு அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நகைகள் கோயிலில் இருக்கலாம் என்று நினைத்து வந்த கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறி்த்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக