திங்கள், 4 அக்டோபர், 2010

Sarath Fonseka. வெலிக்கடை சிறைக்கு வரும் தபால்களை பிரித்து உரியவர்களுக்கு வினியோகிக்கும் வேலை

இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கும்போது, முன்னாள் தளபதி பொன்சேகா மோசடியில் ஈடுபட்டதாக, 2வது நீதிமன்றம் விசாரணைகள் மேற்கொண்டது.

விசாரணையில் பொன்சேகாவுக்கு 30 மாத ஜெயில் தண்டனையை ராணுவ கோர்ட் வழங்கியது. இலங்கை அதிபர் ராஜபக்சே அதற்கு ஒப்புதல் கொடுத்ததை தொடர்ந்து சரத்பொன்சேகா வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் பொன்சேகாவுக்கு உரிய வேலை கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி வெலிக்கடை சிறைக்கு வரும் தபால்களை பிரித்து உரியவர்களுக்கு வினியோகிக்கும் வேலை அல்லது அச்சகத்தில் வேலை வழங்கப்படலாம் என, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

சிறைத்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக, அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனை பொன்சேகா ஏற்றுக் கொள்வாரா இல்லையா என்பது குறித்த சந்தேகம் எழுந்துள்ளதாகவும், எனினும் இந்த பணிகளை அவர் மறுக்கும் பட்சத்தில், இதனையும் விட கடுமையான பணிகள் அவருக்கு வழங்கப்படலாம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக