திங்கள், 11 அக்டோபர், 2010

Ramlath கோர்ட் படியேறிவிட்டார். பிரபுதேவாவும் நயன்தாராவும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!

அம்மா... அப்பா எங்கம்மா?''
''ஷூட்டிங் போயிருக்கார்... நாளைக்கு வந்துருவார்டா செல்லம்!'' - எத்தனை

நாளைக்குத் தான் ரமலத், இந்த பதிலையே தன் குழந்தைகளுக்கு சொல்லிக்கொண்டு இருக்க முடியும்? அதான், கோர்ட் படியேறிவிட்டார். பிரபுதேவாவும் நயன்தாராவும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!
<அதன் முதல் கட்டமாக, ரமலத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் விறுவிறுவென இறங்கி உள்ளனர். இது குறித்து கோடம்பாக்கம் வட்டாரத்தில், ''ரமலத்தை சமாதானப்படுத்த பேச்சுவார்த்தைகள் நடக்குது. 'ஆர்.ஏ. புரம் ஏரியாவில் காளி யப்பா மருத்துவமனை அருகில் தன் பெயரில் இருக்கும் பிரமாண்ட வீடு, 3 கோடி பணம் எல்லாம் கொடுக்கிறேன். வீட்டுச் செலவுகளுக்கு மாசம் 3 லட்சம் கொடுக்கவும் தயார்' என்றும் சொன்னாராம். ஆனால், ரம்லத் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இப்போது இல்லை. இரண்டு தாலிகளுக்காக இந்த பேரம் நடக்கிறது'' என்றனர். தற்போது ரமலத்துக்கு சட்டரீதியான அனைத்து உதவிகளையும் செய்து ஆதரவாக இருப்பவர், பழம்பெரும் தயாரிப்பாளரான ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன். அவரை சந்தித்தோம் ''பிரபுதேவா குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் நல்ல நட்பு உண்டு. ஆழ்வார்பேட்டையில் அவங்க வீடு இருந்தது. பிரபு தேவாவும் ரமலத்தும் காதலிக்கிற காலத்தில், எங்க வீட்டில்தான் அடிக்கடி சந்திப்பாங்க. அவங்க வெளிய போக, என்னோட கார் கொடுத்து அனுப்பி இருக்கேன். அதனால், ரெண்டு பேருக்குமே என் மேல் தனிப் பாசம். பிரபுதேவா - ரமலத் காதலுக்குப் பிரச்னை வந்தபோது... நான், கலைப்புலி தாணு, வாசு மூணு பேரும்தான் சப்போர்ட் பண்ணினோம். பெரிய போராட் டத்துக்குப் பிறகுதான் ரமலத்தைக் கைப்பிடிச்சார். அவர், இன்னிக்கு நயன்தாரா பின்னாடி போவார்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. தன்னை நம்பி வந்தவளுக்கு செய்யும் துரோகம் இல்லையா இது? 'நாடோடிகள்' படத்தில் நண்பர்கள் சேர்த்துவைத்த ஒரு காதல், கல்யாணத்துக்குப் பிறகு பிரியும்போது, கோபம்கொண்டு அதைத் தட்டிக்கேட்பார் சசிக்குமார். கிட்டத்தட்ட அதே உணர்வுதான் எனக்கும்!'' என்றவரிடம், பிரபுதேவா ஏதாவது சமாதானம் பேசுகிறாரா என்று கேட்டோம். ''அவர் எனக்கு போன் பண்ணலை. அவருக்கு ஆதரவா சிலர் என்கிட்ட பேசுறது உண்மைதான். ஆனா, எந்த சமரசத்துக்கும் நான் இடம் கொடுக்கலை. ஏன்னா, இது ஒரு பொண்ணோட வாழ்க்கை. ரமலத்துக்குக் கண்டிப்பா நீதி கிடைக்கும்னு நம்புறேன். பலருக்கு அது ஒரு பாடமாவும் இருக்கும்!'' என்றார் அக்கறையாக! இது இப்படி இருக்க, நயன்தாரா மனநிலை குறித்தும் விசாரித் தோம். நயனுக்கு நெருக்கமான மலையாள சினிமா புள்ளிகள், ''கேரள சினிமாவில் தாராவை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது, இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான டைரக்டர் ஷாஜி கைலாஷ். இருவருக்கும் உண்டான நெருக்கம்பற்றி மலையாள மண்ணில் கதைக்காத டீக்கடைகளே இல்லை. ஷாஜிக்கு சொந்தமான ரிசார்ட்டில் இருவரும் அடிக்கடி நெருக்கம் காட்டினர். அப்படி இருந்த ஒரு சமயத்தில், படம் பிடித்து வீடியோ கிளிப்பிங் வெளியிட்டார்கள். அந்த வீடியோ காட்சி போலியானது என்றார்கள் முதலில். அப்புறமாக நயன்தாரா படத்துக்குப் பணியாற்றிய பிரபல கேமராமேன் ஒருவரே, 'இது நயன்தாராவேதான்...' என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்.

நயன், தமிழ் சினிமாவில், சரத்குமார் நடித்த 'ஐயா' படத்தில் அறிமுகமானார். அப்போதும் ஷாஜி அந்தப் படப்பிடிப்பு நடந்த திருநெல்வேலிக்கு அடிக்கடி சந்தோஷ விசிட் அடித்தார். தான் காதலிக்கும் மனிதருக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பார் நயன். ஷாஜி கைலாஷுக்கு இதுவரை 50 லட்சத்துக்கு மேல் அள்ளிக் கொடுத்தார். அடுத்து 'சந்திரமுகி' படத்தில் நடித்ததும் உச்சிக்குப் போனார். கோடம்பாக்கத்தில் பிஸியாக இருந்ததால், அடிக்கடி ஷாஜியை சந்திக்க முடியாமல் தவித்தார். அப்போதுதான் முன்னணி ஹீரோவின் மச்சான் தொடர்பு கிடைத்தது.
அந்த நேரத்தில்தான் விரல் நடிகரின் தொடர்பும் கிடைத்தது. உதடு கடித்த போஸ்டர் மூலம் உலகத் தமிழர்களுக்குத் தங்களின் காதலை பறைசாற்றினர். நயனின் கதை விவகாரங்களில் அத்து மீறி மூக்கை நுழைத்தார் நடிகர். ஒருகட்டத்தில், இருவருக்கும் முட்டிக்கொண்டது. விரல் நடிகரை வெறுப்பேற்றும் நோக்கத்தில், வேண்டுமென்றே அவரது போட்டியாளரான பெரிய இடத்து மாப்பிள்ளையுடன் ஜோடி சேர்ந்தார்.
காந்தமாக ஒட்டிக்கொண்டார் மாப்பு. வீட்டுக்கே செல்லாமல் நடிகை தங்கிய ஸ்டார் ஹோட்டல் அறையிலேயே சொக்கிக்கிடந்தார். நடிகரின் மனைவி கண் கலங்கினார். விஷயம் பெரிய ஸ்டார் வரை போக... நடிகையை அழைத்துக் கடுமையாக டோஸ்விட்டார். அப்படி செய்யாமல் இருந்தால், இப்போது ரமலத்துக்கு ஏற்பட்ட நிலைமை, பெரிய ஸ்டார் மகளுக்கு வந்திருக்கும்.
'வில்லு' படத்தில் ஒப்பந்தமானார். பொதுவாக ஹீரோயின்கள், ஹீரோவோடுதான் நெருக்கமாக இருப்பார்கள். விதிவிலக்காக, அந்தப் படத்தின் டைரக்டரான பிரபுதேவாவிடம் ஐக்கியமானார். நயனின் படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் அங்கே கரெக்டாக பிரபு ஆஜர். 'பாடிகார்ட்' படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் நடந்தபோது, அங்கேயே டேரா போட்டார். அடுத்து 'பாஸ் (எ) பாஸ்கரன்' ஷூட்டிங் கும்பகோணத்தில் நடந்தது. அங்கேயும் பிரபு விசிட் செய்தார். இப்போது பிரபுதேவா - நயன்தாரா விவகாரம் தீப்பற்றி எரிகிறது. இந்த சூழ்நிலையிலும், நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக நயன்தாரா சைலன்ட்டாக இன்னொரு காரியத்தையும் செய்து வருகிறாராம்.

சென்னையில் ஒரு பிரபல வங்கியின் மேனேஜராக இருப்பவர், 'கன்னிப் பருவத்திலே' படத்து ஹீரோ பெயர்கொண்டவர். கேரளக்காரரான அவருக்கும் நயன்தாரவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதாம். சமீபத்தில், தாரா நடித்த விளம்பரத்தின் வரவு-செலவுகளை அருகில் இருந்து இவர்தான் கவனித்துக் கொண்டாராம். நயன்தாராவைச் சுற்றி உள்ள இந்தக் கூடா நட்பு பிரபுதேவாவுக்குத் தெரியவே தெரியாதாம்!
எம்.குணா, தி.கோபிவிஜய் படங்கள்: ஸ்ரீதர்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக