வெள்ளி, 22 அக்டோபர், 2010

New York Times சுற்றுலா நாடுகளின் தெரிவில் இலங்கைக்கு முதலிடம்.

சுற்றுலாவுக்கு ஏற்ற நாடுகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 31 நாடுகளில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் சஞ்சிகை நடத்திய தெரிவு ஒன்றின் மூலம் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் யுத்த சூழ்நிலை நீங்கி அமைதியுடனான அரசியல் நிறந்தரத் தன்மை நிலவுவதே இதற்கான காரணம் என சஞ்சிகை தெரிவிக்கின்றது.

இதேவேளை நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவ்வருடம் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை என எதிர்பார்க்கப்பட்ட தொகை கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதாக ஆசிய பசுபிக் சுற்றுலா சங்கம் உறுதி செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக