செவ்வாய், 5 அக்டோபர், 2010

Nayanthara உருவப்படத்தை துடைப்பத்தால் அடித்து

நயன்தாரா உருவப்படத்தை துடைப்பத்தால் அடித்து
தீ வைத்து பெண்கள் ஆர்ப்பாட்டம்


நயன்தாரா, பிரபுதேவா திருமணத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. பிரபுதேவா மனைவி ரம்லத் குடும்ப நலக்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில்
நயன்தாராவுக்கு எதிராக பெண்கள் அமைப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்கம், மனித உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பு போன்றவற்றை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இன்று காலை திருமங்கலம் சிக்னல் அருகில் கூடினார்கள்.

அவர்கள், கையில் நயன்தாரா உருவப்படங்கள் வைத்திருந்தனர்.

திடீரென்று நயன்தாராவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி உருவப்படத்தை துடைப்பத்தாலும் செருப்பாலும் அடித்தனர்.

பின்னர் நயன்தாரா படங்களை தீ வைத்து எரித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக