| எம் வீ சன் சீ கப்பலின் உரிமையாளர்களாக இருக்கலாம் என்ற ரீதியில் பெண் ஒருவரும், அவரது கணவரும் விசாரணைக்கு உட்டுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கர்ப்பிணியான குறித்த பெண், நான்கு கட்ட அகதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும் இதுவரையில் அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை. |
| இந்த நிலையில் அவா வெவ்வேறு பெயர்களை வழங்கியதன் காரணமாகவே அவரை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக, கனேடிய அகதிகள் சபை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த குற்றசாட்டில் தொடர்புபடுத்தப்பட்டுள்ள அவரது கணவர், வன்குவாரின் சீர்திருத்த முகாமில் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குறித்த பெண், விசாரணையின் போது சமர்ப்பித்த பெயருக்கும், அவரது ஆவணங்களில் உள்ள பெயருக்கும் வித்தியாசம் காணப்படுகின்ற நிலையில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவரது பிறப்பு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை என்பவற்றில் உள்ள பெயருக்கும், திருமணச் சான்றிதழில் உள்ள பெயருக்கும் வித்தியாசம் இருப்பதாக அகதிகள் ஆர்வலர் ரொன் யமாச்சி சுட்டிக்காட்டியுள்ளார். தமது கணவரின் விருப்பத்தின் பேரிலேயே தாம் பெயரை மாற்றிக் கொண்டதாக விசாரணைகளில் குறித்த பெண் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தமிழ் பெண்கள் திருமணத்தின் பின்னர் தமது பெயரை கணவன் பெயருடன் இணைத்துக் கொள்வார்கள் என்பதை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக