சனி, 30 அக்டோபர், 2010

Malavika மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பிவிட்டார் மாளவிகா.

Malavikaகல்யாணம் பண்ணி, குழந்தை பிறந்து, ஓய்வு முடிந்து மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பிவிட்டார் மாளவிகா.

எம்.ஜி.ஆர் நம்பி தயாரித்து இயக்கும் படம் பொறுத்திரு என்ற படத்தில் ஒரு கவர்ச்சி ஆட்டம் போடுகிறார்.

எம்ஜிஆரின் 'எங்க வீட்டு பிள்ளை' படத்தில் இடம் பெற்ற 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்...' பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாளவிகா நடனமாடுகிறார். எம்ஜிஆர் நம்பியே ஹீரோவாகவும் நடிக்கிறார்.

"நான் பால்காரன் வேடத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். மாளவிகா திருமணத்துக்கு பிறகு முதன் முறையாக நடிகை மாளவிகாவாகவே நடிக்கிறார். கிராமத்துக்கு டீக்கடை திறக்க வரும் அவரை, ஊர் பெரிய மனிதர் என்ற முறையில் வரவேற்கிறேன். மாளவிகாவையும் என்னையும் இணைத்து எனது அத்தை மகள் கனவு காண்பதாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாட்டுக்கு புதிதாக ட்யூன் போடாமல், 'எங்க வீட்டு பிள்ளை' படத்தில் இடம்பெற்றுள்ள நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்... பாடலையே ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியுள்ளோம்.

மறைந்த எஸ்.எஸ்.சந்திரன் 12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இதுதான் அவருக்கு கடைசி படம்..." என்றார் இயக்குநர் எம்ஜிஆர் நம்பி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக