வியாழன், 28 அக்டோபர், 2010

Karnataka:காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது'

பெங்களூரு : "தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது' என, கர்நாடக அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சிக் கூட்டத்தில் நடந்த காரசார விவாதத்துக்குப் பின், இம்முடிவு எடுக்கப் பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

"தமிழக விவசாயத்திற்கு, மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் எடியூரப்பா, சட்டசபை மற்றும் மேலவை அனைத்து கட்சிக் கூட்டத்தை அவரது அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் நேற்று மாலை கூட்டியிருந்தார். கர்நாடக அரசியலில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள், ஒரு மாதமாக, எடியூரப்பாவின் பா.ஜ., ஆட்சியை ஒழித்து கட்ட வேண்டும் என, கடும் முயற்சி மேற்கொண்டன. மூன்று கட்சித் தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் அறிக்கை விடுவதும், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர். இந்நிலையில், நேற்றைய கூட்டத்தில் மூன்று கட்சியினரும் கலந்து கொள்வார்களா என சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகத்தை தவிடு பொடியாக்கி, மூன்று கட்சித் தலைவர்களும் ஆஜராகினர்.

காங்கிரஸ் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, ம.ஜ.த., எதிர்க்கட்சித் தலைவர் ரேவண்ணா, காங்கிரஸ் மேலவை எதிர்க்கட்சித் தலைவர் மேட்டம்மா, ம.ஜ.த., எதிர்க்கட்சித் தலைவர் நானய்யா, நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் மொம்மை, அமைச்சர்கள் அசோக், சுரேஷ் குமார், ஆச்சார்யா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவாதம் நடந்தது. தண்ணீர் திறக்க எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் ஒருமனதாக, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என தீர்மானிக்கப்பட்டது.

ஒரு மணிநேரம் நடந்த ஆலோசனைக்குப் பின், நிருபர்களிடம் அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியதாவது: கர்நாடக விவசாயிகளின் நலன் கருதி, தற்சமயம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு சாத்தியம் இல்லை என, ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வயநாடு, குடகு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.,) அணைகள் நிரம்பி வருகின்றன. கே.ஆர்.எஸ்., அணைக்கு தற்போது, 17 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கே.ஆர்.எஸ்., அணையின் உயரம், 124.8 அடி. தற்போது 124.7 அடி தண்ணீர் உள்ளது. நீர் வரத்து மேலும் அதிகரித்தால், அணையின் பாதுகாப்பு கருதி, தண்ணீர் திறந்து விடப்படும். தமிழகத்திலிருந்து மேலும் தண்ணீர் வேண்டும் என கோரிக்கை வருமேயானால், மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி, முடிவெடுக்கப்படும். தமிழக அரசு எவ்வளவு தண்ணீர் வேண்டுமென்று கேட்கவில்லை. தண்ணீர் வேண்டுமென்று கேட்டுள்ளது. தண்ணீரின் அளவு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருப்பதால், விரிவாக விவரிக்க இயலாது. இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறுகையில், "முதலில் கர்நாடக விவசாயத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறது. அதன் பிறகே, மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் தர முடியும். ஆனாலும், கே.ஆர்.எஸ்., அணை நிறைந்து விட்டது. தண்ணீரை சேர்த்து வைக்க இயலாது' என்றார்.

தமிழகத்துக்கு எதிராக மட்டும் ஒற்றுமை! கர்நாடகாவில் ஒரு மாதமாக ஏற்பட்ட அரசியல் பரபரப்பு, 16 எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது, மெஜாரிடியை நிரூபிக்க கூறிய கவர்னர் பரத்வாஜ், இரண்டு முறை மெஜாரிடியை நிரூபித்த முதல்வர் எடியூரப்பா, 16 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம், 11ம் தேதி சட்டசபையில் பயங்கர கலவரம், பா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரஸ், ம.ஜ.த., மறைமுகமாக ஒன்று சேர்ந்தது, தினம் தினம் ஒவ்வொரு கட்சியின் அறிக்கை, போராட்டம், எம்.எல்.ஏ.,க்களிடம் கோடிக்கணக்கில் பேரம் என, ஒரு மாதமாக எதிரும் - புதிருமாக இருந்த மூன்று கட்சியினரும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக கோரஸ் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சரவணன் - சென்னை,இந்தியா
2010-10-28 17:53:53 IST
அங்க பாருங்க எதிர் கட்சியும் ஆளும் கட்சியும் தமிழகத்திற்கு தண்ணீர் தர கூடாது என்ற கொள்கையில் ஒற்றுமையாக இருககாங்க. இங்க அய்யாவும் , அம்மாவும் தமிழகத்தின் வளர்ச்சிகாக ஒன்றாக பேசியதுண்டா...
kalai - கோயம்புத்தூர்,இந்தியா
2010-10-28 17:50:20 IST
போகங்கட கர்நாடக சூர மக்கள் ..... குளிக்க கூட மாட்டாங்க அவனுக்கு எதுக்கு தண்ணி ...,,, தண்ணி ஓவர் ப்லொவ் ஆகட்டும் எங்களுக்கு வேண்டாம் நீங்களே வசுகொங்க அப்பயாவது குளிகராங்கனு பார்க்கலாம் தமிழனுக்கு ஆண்டவன் இருக்கான் டோன்ட் வொர்ரி...
வை சுப்பாராவ் - சிங்கப்பூர்,இந்தியா
2010-10-28 17:33:38 IST
அதென்ன நம் தமிழக அமைச்சர்களால், ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், மலாய்ஷியா இங்கிருந்தெல்லாம், முதலீடுகளும், கடனும் கொண்டுவரமுடிகிறது; சுமுக தொடர்பு வைத்துக்கொல்லுகிரார்கள். ஆனால் பக்கத்து மாநிலத்தானுடன்(அண்டை வீட்டானுடன் ) நட்புடன் இருப்பதொ, பேச்சு உறவும் தொடர இயலுவதில்லை. அரசியல் வாதிகளெல்லாம் அந்த அண்டை மாநிலங்களில் தங்கள் உறவுகளை குடியிருத்தி, கல்லூரிகளையும், தொழில்களையும் வளரத்துக்கொள்ள மட்டும் முடிகிறது; பொதுமக்கள் தேவை என்று வருகையில் மட்டும் பங்காளிகள் சண்டை ....
ஒரு அப்பாவித்தமிழன் - தமிழ்நாடு,இந்தியா
2010-10-28 16:46:23 IST
"காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது' : அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகா முடிவு. அவ்வளவுதான். அவர்கள் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் மீது போரா தொடுக்க முடியும். மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவோம். தீர்வு இல்லை என்றால் மீண்டும் கடிதம் எழுதுவோம். அதை பத்திரிக்கைகளில் வெளிவரச்செய்வோம். அதற்க்கு பிறகும் மக்கள் போராட்டம் நடத்தினால், அது எதிர்கட்சிகளின் தூண்டுதலால் என்று பதில் கொடுப்போம். உச்ச நீதிமன்ற தீர்ப்பே கிடப்பில் உள்ளது. அமல்படுத்த வேண்டிய மத்திய அரசு ஒன்றும் செய்யாமல் இருக்கும் போது, சாதாரண மாநில அரசு என்ன செய்ய முடியும். மக்களுக்கும், எதிர்கட்சியினருக்கும் வேறு வேலை இல்லை. ஆட்சி நடத்திப் பார்த்தால்தானே அதன் வலி தெரியும். இப்போதைக்கு இது போதும்....
ஜஸ்டின் - சென்னை,இந்தியா
2010-10-28 16:46:22 IST
நல்ல மலை பெய்யும் போது அவன் அணையை திறக்க விட கூடாது. அப்பா அவன் வந்து கேஞ்சடும். நெய்வேலி கரண்ட் கொடுபதி நிறுத்தி கொள்ளவும....
SR Muralidharan - Kolkata,இந்தியா
2010-10-28 16:23:09 IST
We need a politician like NT Rama Rao who challenged the then Congress Government to go against the water agreement signed between TN and AP in presence of Mrs Gandhi. He had a vision of entire country's requirement irrespective of the fact that he had film origin in Chennai....
சிவா - பெங்களூர்,இந்தியா
2010-10-28 16:05:59 IST
தமிழ் நண்பர்களே அவசரபடாதிர் பெங்களூர் இருக்கும் எங்களுக்கு எதிராக பிரச்சினை உருவாகும். தண்ணிரை சேமியுங்கள் அதுவே நல்ல முடிவு. இந்திய வுல சட்டம் ஒரு இருட்டறை அதனால ஒன்னும் பண்ண முடியாது....
சுதா ராம்குமார் - சென்னை,கத்தார்
2010-10-28 16:03:18 IST
இது ஒன்றும் புதிது அல்ல . முதலில் நாம் நமது உரிமை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஆற்று நீர் உற்பத்தி ஆகும் இடத்தை விட அது சேரும் இடத்திற்கே உரிமை அதிகம். நமது உரிமையை திரு கலைஞர் அவர்கள் புதுபிக்காமல் தூங்கிவிட்டார் .இந்தியாவில் இருந்து அண்டை நாட்டுக்கு போகும் ஆற்று நீரை இந்திய நிறுத்தி பார்க்கட்டும் .அவர்கள் இன்டர்நேஷனல் கோர்ட்டில் வைத்து ஆப்பு அடிப்பார்கள்.இங்கு இந்தியாவில் தமிழன் ஏமாளி ....
ப.பாலா - நோர்வே,நார்வே
2010-10-28 16:01:09 IST
ஒரு 10 cm நிரம்பவா இவ்வளவு அக்கபோர். இத ஒரு அறிக்கைனு பேட்டி வேறு கொடுத்து இருக்கிறாய். எந்த நிருபரும் எதிர் கேள்வி கேட்கவில்லையா?. ஏதோ அவர்களுக்கே தண்ணீர் குறைந்த அளவு தான் இருப்துபோல பேட்டி கொடுதிரிகிறான்...
செந்தில் குமார் - பெங்களூர்,இந்தியா
2010-10-28 15:58:32 IST
தமிழ் மக்களை காப்பாத்த கடவுள் ஆட்சிதான் வரணும். பல கோடி ரூபா செலவுல தமிழ் மாநாடு, அதுக்கு பொது மக்களுக்கு பவர் கட். கோவை மாநகரமே ஸ்தம்பித்து போச்சு அப்போ. இவரு லெட்டர் அனுப்பி தண்ணி கேட்டாராம். லெட்டர்ல என்ன இருந்தது. இதை எல்லாம் யாரு நம்பறது. இதயெல்லாம் யாரு கேக்கறது. அந்த கருணாநிதி குடும்ப அரசியல் பண்ணி பண்ணி மொத்த தமிழ் நாடயே நாசம் பண்ணிட்டாரு. அவரா புத்தி வந்து திருந்தனும்....
ராட்ஜி நிர்மல் - valenciennes,பிரான்ஸ்
2010-10-28 15:51:25 IST
தேசிய கட்சியுடன் கூட்டணி சேராமல் திராவிட கட்சிகள் தனித்து நின்றால் ஒரு வழி கிடைக்கும்.. இல்லை என்றால் தண்ணீர் கிடைக்க வேறு வழி தேடுங்கள் ... யாரிடமும் பிச்சை வேண்டாம்...
சங்கர்கணேஷ் - ஜெர்மனி,இந்தியா
2010-10-28 15:26:25 IST
இந்த செய்திய படிச்ச பிறகு மனசு ஒரு மாதிரியா இருக்கு. இவனுக எப்ப திருந்துவங்கனு தெரியல. இதுக்கு ஒரே தீர்வு நம்ம பசங்க பெங்களூர் IT கம்பெனிக்கு வேளைக்கு போகாம இருந்த சரியாய் போகும். நம்ம தமிழ் ஆளுக அங்க பொய் வேலை செய்யறது நாளத்தான் கர்நாடகாவுல பைசா கொட்டுது. பெங்களூர் தவிர எந்த ஊரும் அங்க முன்னேரல. பெங்களூர்ல வேலை செய்ய கூடாதுன்னு ஒரு குறிகோளோட இர்ருக்கிறேன் நான். என்னை பொறுத்த வரைக்கும் நம்ம மொதல்ல மனுசங்க அப்பறம் தான் தமிழன் கன்னடியன், இந்தியன் எல்லாம். ஆனா இவனுக பண்றத பார்த்த என்னையும் இப்படி வேறு படிதிகனும் போல இருக்கு கடவுள் தான் நம்மள kaapathanum...
சேஷாத்ரி - chennai,இந்தியா
2010-10-28 14:54:52 IST
we cant blame any state for this. In chennai alone, when it is massive rain, all the water is going into sea. we have no right to speak about water scarcity blaming others. Had we stored rain water properly, we would never end up like that. I saw the effects of rain water harvesting at my residence. before strict rule on rain water harvesting, we bought 5 months we bought water tankers. after jayalalitha forced rain water harvesting, we bought water tanker for only one month. Jaya has done a great job by forcing that. Whether it was implemented properly or not, but it improved the water table to certain extent. Now we should learn how to save natural resources instead of blaming others for vote politics....
செந்தில் - London,இந்தியா
2010-10-28 14:32:07 IST
We should build a DAM in tamilnadu so the water when the DAM in cauveri is full shouldnt enter into Tamilnadu and all should go back to Karnataka. Let them use all water even when the Dam is full. Rascals.. No broad mindedness...
குஞ்சப்பன் - சென்னை,இந்தியா
2010-10-28 14:25:02 IST
இது மிகவும் கேவலமான முடிவு. வயதேரிச்சலாக இருக்கிறது. வாசகர் ராம் சொனது போல, நாமும் ஒரு ஆணை கட்டுவோம். அங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பொது, நாமும் இந்த அணையை மூடி, அவர்களை வெள்ளத்தில் மூழ்கடிப்போம். அனைத்திற்கும் நம்மிடம் வந்து நிற்கும் இவர்கள், காவேரி என்றல் ஒன்னு கூடி, தர மாட்டேன் என்கிறார்கள்....
alexpandian - singapore,இந்தியா
2010-10-28 14:22:14 IST
karnataga told that correct,they take care 1st karnataga after then tamilnadu or other state. tamilnadu CM not like that ,stil not enough electricpower in TN . having more problems are mills,indutries,villages,etc.so why we give power oher state. i so confusing.........
jacob - goa,இந்தியா
2010-10-28 14:21:14 IST
காசு குடுத்தும் சமையல் எரிவாயு கிடைக்கல, இந்த நிலைல ஓசில தண்ணி கேக்குதா. போங்கடா நீங்களும் உங்கள் .....தவறு செய்பவர்கள் மக்களால் தண்டிக்கப்படவேண்டும் ....
கோபால்gopal - saudiarabia,இந்தியா
2010-10-28 14:18:40 IST
நாம் தண்ணிர் கேட்டு வெகு நாளாக முயற்சி செய்து இருக்கிறோம் நமது அரசியல் தலைவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் மாறிமாறி ஒருவரை ஒருவர் சண்டை போட்டுகொண்டு அவர்களுடைய் பணம் சேர்பதில் குறியாக உள்ளனர் அத்த கடயுள் தான் இந்த மக்களை காப்பத வேண்டும்...
செல்வா - காரைக்குடி,இந்தியா
2010-10-28 14:17:45 IST
காலம் Internet,Email,Video Conferenceன்னு போய் கொண்டு இருக்கிறது. இவர் கடிதம் அனுப்பி அதை மதிச்சு அவனுக தண்ணீர் அனுப்புவதற்குள்.........ஸ்ஸ்ஸ்ஸ்.....முடியல.............
சுந்தர் G - அபுதபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-28 14:11:37 IST
யாரையும் நம்புவதக்கு இல்லை. தமிழ்நாட்டில் ஒய்வு பெற்ற நல்ல அனுபவசாலி IAS அதிகரியயை தேர்ந்தெடுத்து அவரை TN CM ஆகுங்கள். பிறகு ஒய்வு பெற்ற நல்ல IAS அதிகாரிகளை MLA ஆகுங்கள். மொத்தத்தில் கருணா நிதி,ஜெயலலிதா மற்றும் சினிமகாரர்கல்லுக்கு ஒய்வு கொடுக்க வேண்டும். சினிமகரர்கல்லுகு என்ன தெரியும்? Indian economic & Indian Human ரைட் பத்தி? தமிழ் நாட்டில் சட்ட ஒழுங்கு மற்றும் தண்டனைகள் மிக கடுமையாக்கப்பட வேண்டும். இலவசங்கள் மற்றும் மக்களை சோம்பேறியாக்கும் சில திட்டங்கள் ஜவகர் 100 நாள் வேலை நிறுத்தப்பட வேண்டும். விவசாயம் , தொட்ட கலை, கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு கிராமங்களிலும் கன்றுகள் நட்டு காடுகளை உருவாக்க வேண்டும். மழை நீரை சேமிக்கவும் மரக் கன்றுகளை நடவும் அரசு ஊகவிக்க வேண்டும். ஆற்று மணல் எடுப்பதை தடுத்து ஏறி குளங்களை தூர் வாரவேண்டும். விவசாய நிலங்களில் வீடு கட்டுவதை தடுத்தும் பொறம்போக்கு நிலங்களை மற்றவர்கள் அதிகம் செளுதுவடையும் தடுத்து இதற்கென்று ஒரு தனி சட்டம் ஏற்றவேண்டும். மொத்தத்தில் தமிழ் நாடு மற்ற மாநிலங்களை எதிர்பார்க்கும் சில பொருட்களையும் வேலைவாய்ப்பையும் இங்கேயே ஏற்படுதபடவேண்டும். கடைசியில் ஆந்திரா கர்நாடகா மற்றும் கேரளா ஆறுகளில் மிக பெரிய அணை கட்டவேண்டும். அங்கு வெல்ல அபாய நாட்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு வரகூடது. அங்கு பலி எண்ணிக்கை அதிகமாக அதிகமாக சுப்ரீம் கோர்ட்டும் எடயுருப்பவும் ஓடி வருவார்கள் அணையை ஓடைக்க சொல்லி... அப்பொழுது காட்டவேண்டும் இவர்களுக்கு தமிழனின் சக்தியை ஒன்றுபடுவார்களா நம் மக்கள் மற்றும் நம் அரசியல்வாதிகள்?...
ராஜேஷ் - பெங்களூர்,இந்தியா
2010-10-28 14:05:05 IST
நதிகளை தேசியமயமாக்குங்கள். அதற்கு இந்த அரசியல்வாதிகளுக்கு தில் இருக்கா? இதை வச்சிதான் பொழப்பே ஓடுது. கிடைக்கிற தண்ணீர பொறுப்பா உபயோக படுத்தினாலே போதும். ராஜேஷ், பெங்களூர்...
kumaravel - mysore,இந்தியா
2010-10-28 13:58:52 IST
when so many rivers in the world flows thro various countries and all they have proper water sharing agreement like river danube in europe, i am ashamed to see in india so many river water disputes. because there was never one india and only amalgamation of various states . no proper central goverrnment ,no supreme court no strong leader, and as usual backstabbing tamil leaders who are interested only in their families and friends .tamilnadu cannot fight for their rights and it is a pity we have to carry a begging bowl for our rightful share of water...
jk - india,இந்தியா
2010-10-28 13:54:55 IST
எடியுரப்பா..., நீர் என்றும் தமிழக மக்களுக்கு பெரும் இடயூரப்பா..,...
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
2010-10-28 13:53:03 IST
ஏன் நாம் அடுத்தவர்களிடம் தண்ணீருக்காக கை ஏந்தவேண்டும், பருவமழை பெயிது தண்ணீர் விணாக சென்று கடலில் கலக்கிறது .அதை தடுத்து அணைகளில் சேர்த்து வைக்கும் முறையில் புதிய அணைகளை கட்ட அரசாங்கம் முயற்சி செய்யவேண்டும்,இப்போது வரும் அரசாங்ககள் (1967) க்கு பிறகு தொலைநோக்கு பார்வையின் கீழ் எந்தவிதமான நல்ல திட்டங்களும் கொண்டு வருவது கிடையாது,வருபவர்களிலாம் வோட்டு வாங்குவதற்காக இலவசங்களை காட்டி வோட்டு வாங்கி ஆட்சியில் அமருகிறார்கள்,இலவசங்களுக்கு சிலவிடும் பணத்தை கொண்டு நல்லமுறையில் நல்ல திட்டங்கள் கொண்டு வரவில்லையெனில் இந்த தமிழ் சமுதாயம் உங்களை ஒருபோதும் மன்னிக்காது,படிக்காத மேதை காமராஜரின் ஆட்சியில் மக்கள் பயன் பெரும் அடிப்படையில் பல அணைகள் கட்டப்பட்டன அதன் பிறகு வந்த கழக ஆட்சியில் எத்தனை புதிய அணைகள் கட்டப்பட்டன என்று இவர்களால் சொல்லமுடியுமா,என்ன இல்லை இந்த தமிழ்நாட்டில் நாம் ஏன் கை ஏந்தவேண்டும் அடுத்த மாநிலத்தில் ?...
S.GNANASEKARAN - AVINANGUDI,இந்தியா
2010-10-28 13:46:05 IST
BUILD NEW LAKES, DAMS. GROW MORE TREES. DON'T LET THE RAIN WATER GO TO SEA. DON'T GIVE ELECTRICITY TO OTHER STATES. WE NEED MORE ELECTRIC POWER....
முத்துவேல் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-10-28 13:44:02 IST
நிறுத்து மின்சராதை...
K.Thirumalairajan - Rajakilpakkam,இந்தியா
2010-10-28 13:40:24 IST
அங்கே மக்கள் நலனுக்காக ஒற்றுமையாய் செயல்படுகிறார்கள்;இங்கே, ஆட்சிக் கனவிலே ஒருவரை ஒருவர் சாடுகிறார்கள்!மக்கள் வாடாமல் வாழவா முடியும்?...
முத்துவேல் - coimbatore,இந்தியா
2010-10-28 13:36:03 IST
கர்நாடக நோ வாட்டர் , தமிழ்நாடு நோ கரண்ட்...
போண்ட - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-10-28 13:29:26 IST
பஞ்ச பூதங்களை தன்னிடமே வைத்துகொள்ள நினைக்கும் எவருமே வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை காற்றும் நீரும் சிறையில் அடையாதது அப்படிப்பட்ட நீரை அடைத்து வைக்க நினைக்கும் இந்த கேடுகெட்டவர்கள் நிச்சயம் அதே நீரால் ஒரு நாள் அழிய கூடிய நாள் நிச்சயம் வரும்...
மணிகண்டன் - tamilnad,இந்தியா
2010-10-28 13:24:33 IST
தண்ணீரை வைத்து என்ன செய்யுவது,நீரை வைத்து விவசாயம் செய்யலாம்,விவசாயத்தால் பணம் கிடைக்கும்,அந்தபனத்தைதான் அந்தப்பணம்தான் இப்போதே கிடைக்கிறதே நமது அய்யா கொடுக்க சொல்லி இருக்கிறாரே! பிறகு ஏன் தண்ணி வேண்டும்,அடுத்த ஆட்சியில் வெற்றி பெற்றால் நிச்சயம் கிடைக்கும்,பெரிய ஆப்பு எல்லா தமிழ் மக்களுக்கும். விழித்து கொள் தமிழா! விழித்து கொள்!...
வண்டு முருகன் - பெங்களுரு,இந்தியா
2010-10-28 12:56:54 IST
அய்யா தாமதிக்காமல் உடனே சோனியா அம்மா க்கு கடிதம் எழுதி அனுப்புங்கள். இப்போ அனுப்பினால் தான் தீபாவளி முடிந்து அங்கு சென்றுஅடையும். -வ. முருகன்...
சுதாகரன் - தர்மபுரி,இந்தியா
2010-10-28 12:55:22 IST
வந்தோரை வாழவைத்த தமிழ்நாட்டிற்கு இப்படி ஒரு நிலைமை.... அணையை காக்க நினைக்கும் அரசியல்வாதிகள் மக்களின் தண்ணீர் தாகத்தை நினைக்க வில்லையே.... முருகா.. உமது தமிழ் மக்களை நீதான் காக்க வேண்டும்... இந்த பாழாப்போன அரசியல்வாதிகளால் ஒன்னும் முடியாது....
பாட்ஷா - மதுரை,இந்தியா
2010-10-28 12:54:45 IST
என்ன கொடும சார் இது. சீக்ரம் மலை வரணும் ஆண்டவா...
அருணா - Chennai,இந்தியா
2010-10-28 12:41:02 IST
கர்நாடக நீர் நமக்கு தேவை இல்லை, நம்மிடம் பெய்யும் மழையே நமக்கு போதும். தேவை பல சிறிய அணைக்கட்டுகளும் , ஏரிகளும் , குளங்களும் வாய்க்காலும் தான். நம் ஆட்சியாளர்கள் கொஞ்சம் பந்தை இதில் செலவிடுவார்கள? அல்லது இருகின்ற கொஞ்ச நன்ச ஏரிகளையும் வீட்டு மனைகளாக மாற்றுவார்கள?...
உ. சங்கர் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-10-28 12:36:52 IST
அடுத்த முறையும் கருணாநிதியே ஆட்சிக்கு வரட்டும். அரசியல்வாதிகள் வாழலட்டும் தமிழ் இழிச்சவாய்கள் ஒழியட்டும். கருணாநிதி வாழ்க?????????...
Tamillachi - தமிழ்நாடு,இந்தியா
2010-10-28 12:26:14 IST
இருங்க டா... உங்களுக்கு எல்லாம் கரண்ட் குடுக்காம shock treatment குடுக்குற நாள் ரொம்ப தூரத்தில இல்ல.......
மொக்கசாமி - மானாவரிமனிதன்,இந்தியா
2010-10-28 12:25:34 IST
சோம்பேறிகள் இருக்கும் இடத்தில தான் மழை மாரி தண்ணியெல்லாம் ...கேரளா , கர்நாடக மாநிலங்களில் நல்ல மழை... நல்ல விவசாயிகள் இருக்கம் இடத்தில தமிழகம் ஆந்திரத்தில் தான் தண்ணி பஞ்சம்... மாநிலங்களை மொழி வாரிய பிரிக்காமல் கிடைகோடாக பிரித்திருந்தால் இந்த பஞ்சம் இருக்காது .......
வரதராஜன் - mathurai,இந்தியா
2010-10-28 12:23:00 IST
பிஜேபி க்கு வரிந்துகட்டி எழுதும் நபர் யாரையுமே இன்று காணோமே !!!!! நம்ம ஊர் பிஜேபி காரர்கள் முடிந்தால் தண்ணீர் கேட்டு வாங்கி கொடுக்கட்டும்....
gknatarajan - சென்னை,இந்தியா
2010-10-28 12:21:42 IST
கர்நாடகாவில்,எந்த அரசு வந்தாலும் இதே கதிதான்! நூற்றுக்கணக்கான,கோடிகள் செலவழித்து,கோர்ட்,த்ரிபூனல், , எல்லாம் எதற்கு!ஒன்றையும் செயல்படுத்தமுடியாத, மதிய அரசு எதற்கு?வெள்ளம் வந்தால்தான் தண்ணீர் என்ற நிலைதான், எப்போதும், பார்க்கிறோம்! க.கி.நடராஜன்....
செந்தில் - மதுரை,இந்தியா
2010-10-28 12:19:17 IST
ஒன்னும் கவலை படாதிங்க. அவங்க தான் தண்ணிய திறந்து விடுவாங்க. கொஞ்சம் பொறுமையா இருங்க....
இரா. முத்துப்பாண்டியன் - சிவகங்கைச்சீமை,இந்தியா
2010-10-28 12:14:12 IST
எங்கே போனது இறையாண்மை? அதே நேரம் நமது ஊரில் ஆட்சியில் இருப்பவர்கள் நினைத்தால் நிறைய தடுப்பணைகளைக் கட்டி மழை நீரை சேமிக்கலாம். ஆனால் இவர்கள்தான் ஏரிகளைக் கூட தூர் வாருவதில்லையே... அதில் வீடு கட்ட அனுமதி அளித்து கொள்ளை அடிப்பதிலேயே காலத்தைச் செலவிட்டு அவன் கொடுக்கவில்லை இவன் கொடுக்கவில்லை என்று குறை கூறிக்கொண்டு, கடிதம் மட்டுமே எழுதிக்கொன்டிருந்தால் வராது....
C . Mariadhas - Melpuram,இந்தியா
2010-10-28 12:08:42 IST
கர்நாடகாவும்,கேரளாவும் மட்டும் தண்ணீர் குடித்தால் போதும் தமிழ் நாட்டுக்கு வேண்டாம்! என்னடா , சுயநலவாத அரசியல் வாதிகளா இருக்கிறிகள்! நாட்டின் பொது சொத்தை தங்களுக்கு மட்டும் உரிமை கொண்டாடும் அரசியல் கோமாளிகளால் கூத்து நடத்தப்படுகிறது இயற்கையாக எந்த தடைகளும் இன்றி ஓடிக்கொண்டிருந்த நதி நீர் வீணாவதை தடுத்து மக்களுக்கு பயனுற செய்ய மத்திய அரசு ஆவன செய்யுமா?...
Jose - Bangalore,இந்தியா
2010-10-28 12:04:26 IST
நீங்க தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்ல, யாருக்கும் தண்ணி கொடுக்க வேண்டாம்.....ஆனால் மழை காலத்திலும்....உங்க அணைகள் நிரம்பி இருந்தாலும்....தயவு செஞ்சு தண்ணி திறந்து விட வேண்டாம்.......குடிக்க, வாழ்வாதாரத்துக்கு தேவை ஆன தண்ணியில்.... இப்படி... அரசியல்...... இவனுகள எல்லாம்.........
Kesavamoorthy - Coimbatore,இந்தியா
2010-10-28 11:54:07 IST
அடுத்த மாநிலத்தவரிடம் சண்டையிட்டு ஒரு பயனும் இல்லை. தமிழ்நாடு ஒரு பெரிய மாநிலம். நமக்கு தேவையான நீரை இங்கேயே உற்பத்தி செய்ய முடியும். மழை நீர் சேகரிப்பு, மரம் நடுதல் போன்ற முக்கிய திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வந்து குடியேறுவதை மறைமுகமாக தடுக்க வேண்டும். சென்னை கோயம்புத்தூர் போன்ற ஊர்களில் இதை முதலில் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தொழில்களில் தமிழனுக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும்....
indian - சென்னை,இந்தியா
2010-10-28 11:21:25 IST
கர்நாடகாவில் மழை நிறைய பெய்து அனை அனைதும் நிரம்ப வேண்டும் அப்போது அன்னையை அவர்கள் திறக்க விட கூடாது அப்ப்போது தெரியும் அவர்களுக்கு, இது கேரளாவுக்கும் போர்ருதும் எவனும் தமிழகத்துக்கு நீர் தர மாட்டார்கள் அனால் இவர்களுக்கு போதுமான நீர் கிடைத்தவுடன் நீரை திறந்து விடுவார்களம். நாம் தமிழர் என்று சொல்லுதல் கூடாது நாம் இந்தியர் என்று சொல்ல வேண்டும். ஜெய் ஹிந்த்...
இளங்கோ - டோஹாகத்தார்,கத்தார்
2010-10-28 11:15:00 IST
இந்த ஒற்றுமை ஏன் நமது கட்சிகளிடையே இல்லை. என்று நமது கட்சிகள் தனது சுய விருப்பு வெறுப்புகளை மறந்து தமிழ் நாட்டின் நலன்களுக்காக ஒன்று படுகிறார்களோ அன்றுதான் நமக்கு நமது உரிமைகள் எல்லாம் கிடைக்கும். இது எல்லா விசயங்களுக்கும் பொருந்தும். நமது தமிழ் நாட்டின் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து பொது பிரச்சினைகளுக்கு ஒன்று படுங்கள்....
ebenezer - chennai,இந்தியா
2010-10-28 11:14:10 IST
யார் இந்த நிலையில் இருந்தாலும் இப்படி தான் சொல்வார்கள். தனக்கு மிஞ்சிதான் தானம். அரசியல்வாதிகள் போல் வாசகர்களும் பேச வேண்டாம். நாம் நல்லாவே பாத்துட்டோம். AIADMK 20 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டார்கள், அப்படியே தான் DMK . எதிர்கட்சியில் இருக்கும்போது லோலோன்னு கத்துவாங்க. ஆட்சிக்கு வந்ததும் அடுத்தவங்க கத்துவாங்க. கவலையை விடுங்க. இந்த ஆண்டு மழை கொட்டபோகுது. yedurappa திக்குமுக்காட போறாரு....
ர.sathees - tirupur,இந்தியா
2010-10-28 10:59:57 IST
அய்யா தமிழகத்துக்கு தண்ணீர் எதற்கு , ஆற்றில் தண்ணீர் வருமேயானால் மணல் தொழில் பாதிக்கும் , அரசுக்கு வரு (மானம் ) போய்விடும் . விவசாயிகள் தாங்களாகவே நெல் உற்பத்தியை செய்ய ஆரம்பிப்பார்கள், அப்புறம் ஒரு ரூபாய் அரிசிக்கு மக்களிடத்தில் மோகம் இல்லாமல் போய்விடும் , மக்கள் அப்புறம் உழைக்க ஆரம்பிய்த்து விட்டால் இலவசங்களை எதிர்பார்க்க மாட்டார்கள் .அப்புறம் எப்படி நாங்கள் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியும். சோ எங்கள் ஆட்சியில் தண்ணீர் வராமலிருக்க என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் கண்டீப்பாக செய்வோம், கடிதம் எழுதுவோம் , நட்பு முறையாக எடியுரப்பாவை சிந்திப்போம் எங்கள் குடும்ப தொலை கா ட்சிகளுக்கு பாத்தியமில்லாமல் பத்துகொல்லும்படி கேட்டு கொள்வர்,அவ்வளவுதான்....
சிவன் - Thanjavur,இந்தியா
2010-10-28 10:50:23 IST
இரண்டாம் உலக யுத்தமே தண்ணீருக்காகத்தான் துவங்கியது. முழு கொள்ளளவு எட்டிய பின்னரும் தண்ணீர் திறக்க முடியாது என்று சொல்பவர்களை என்ன செய்யப் போகிறார் தமிழக முதல்வர். கடிதம் போதாது தண்ணீர் வர என்ன வழியென்று பாருங்கள். எவ்வளவு வேண்டும் என்று கேட்கவில்லையாம்? தமிழகம் - கேட்டால் கொடுத்து விடுவார்களா? தமிழக அரசியல் வாதிகளுக்கு மக்களைப் பற்றிய கவலை கொஞ்சமும் கிடையாது என்பது தான் உண்மை அவர்கள் வயிறும், கல்லாப் பெட்டியும் நிறைந்தால் சரி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக