வியாழன், 14 அக்டோபர், 2010

France உலக மயம், தாராள மயம், தனியார் மயம், இவை முதலாளித்துவத்தை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது

பிரான்ஸ் சொல்லும் சேதி... 
பிரான்ஸ் நாட்டில் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தால் நாடு முழுவதும் பணிகள் முடங்கின. விமானம், ரயில் போக்குவரத்து, மருத்துவ மனை, பள்ளிக்கூடங்கள் அனைத்தும் செயலற்று நின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், எரி வாயு, மின்சாரம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் என அனைவரும் போராட்டத்தில் குதித்தனர். அக்டோபர் மாதத்தில் நடக்கிற நான்காவது வேலை நிறுத்தம் இது. கடந்த மார்ச் முதல் கணக் கிட்டால் இதுவரை எட்டு வேலை நிறுத்தங்கள் பிரான்ஸைக் குலுக்கியுள்ளன. சமீபத்தில் பிரான்ஸ் முழுவதும் நடைபெற்ற 240க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரம் தொழிலாளர்கள் ஆவேச முழக்கமிட்டுள்ளனர்.

உலக மயம், தாராள மயம், தனியார் மயம், இவை முதலாளித்துவத்தை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. இதிலிருந்து தப்பிக்க முதலாளித்துவ நாடுகளில் சிக்கன நடவடிக்கைகள் என்கிற பெயரால் உழைப்பாளி மக்களின் உரிமைகளை பறிக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பிரான்ஸ் நாட்டில் உழைப்பாளி மக்களின் ஓய்வூதிய வயதை 60லிருந்து 62ஆக உயர்த்தவும்; மேலும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் வயதை 65லிருந்து 67ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் உழைப்பாளி மக்களின் ஓய்வூதியத்தை குறைக்கவும் திருடவும் பல் வேறு விதமான நிபந்தனைகளுடன் புதிய ஓய்வூ திய சட்டத்தை நிறைவேற்ற பிரான்ஸ் வெறித் தனமாக உள்ளதால், தொழிலாளி வர்க்கம் வீதியில் திரண்டு நிற்கிறது.

இந்த வேலை நிறுத்தங்களை தொழிற்சங்கங்கள் தன்னிச்சையாக அறிவிக்கவில்லை. வாக்கெடுப்பு நடத் தப்பட்டு பெரும்பான்மையான உழைப்பாளி மக் களின் ஆதரவோடு இப்போராட்டங்கள் வீறு கொண்டு எழுகின்றன. பொது மக்களிடமும் மேற் கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகளில் போராட் டத்திற்கான ஆதரவு அபரிமிதமாக காணப்படு கிறது. தற்போது புதிய திருப்பமாக மாணவர்க ளும் போராட்டக்களம் நோக்கித் திரும்பியுள்ள னர். பிரான்ஸ் அரசு இந்தப் புதிய திருப்பத்தால் நிலை குலைந்துள்ளது. ஏனெனில், மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவது அவ்வளவு சுலப மல்ல. அது மிகப்பெரிய அரசியல் சவாலாக மாறும் என்பதால் அரசு கதிகலங்கி எப்படி தொழிலாளி வர்க்கத்தோடு சமரசம் செய்து கொள்வது என யோசிக்கிறது.

பிரான்ஸ் மட்டுமல்ல போர்ச்சுக்கலில் நவம்பர் 24ஆம் நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர். 1988க்குப் பிறகு நடக்கவுள்ள மிகப்பெரிய போராட்டமாகும். அரசின் ஊதியக் குறைப்பிற்கு எதிராகவே இப் போராட்டம் எழுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் வேலையின்மைக்கு எதிராக ஸ்பெயின் தொழிலாளி வர்க்கம் நடத்திய போராட்டம் 2002க்குப் பிறகு நடந்த மிகப்பெரிய போராட்டமாகும். இத்தாலியில் அக்டோபர் 16ஆம் நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடந்துள் ளது. இப்படி உலகமயத்தின் சுமையை தொழிலாளி வர்க்கத்தின் தலையில் சுமத்துவதற்கு எதிராக பல நாடுகளில் போராட்டம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

இந்தியாவில் புதிய ஓய்வூதியத் திட்டம் என் கிற பெயரில் ஏமாற்று நாடகம் ஆடுகிற மத்திய அரசு திருந்த வேண்டும். பிரான்ஸ் கிளர்ச்சி இந் தியாவை பற்ற நீண்டநாள் ஆகாது. தொழிலாளி வர்க்கம் உலக நிலையை உன்னிப்பாக கவனித்து போராட்ட வியூகத்தை வலுப்படுத்த வேண்டும். மாணவர்கள், வாலிபர்கள் என அனைத்துப் பகுதியினரையும் வேலையின்மைக்கு எதிராக வும் விலைவாசிக்கு எதிராகவும் வேலை பாது காப்பிற்காகவும் அணிதிரட்ட உரிய தருணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதுவே
பிரான்ஸ் சொல்லும் சேதியாகும்.
(தீக்கதிர்)F

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக