திங்கள், 4 அக்டோபர், 2010

Delhi 2010.பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு

டெல்லியில் வலம் வந்த பிச்சைக்காரர்கள் யாரையும் அங்கு காணவில்லை. அனைவரையும் கட்டாயப்படுத்தி நகரிலிருந்து வெளியேற்றியுள்ளதாக டெல்லி அரசு மீது மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் [^] சாட்டியுள்ளனர்.

டெல்லி சாலைகள், வணிக வளாகங்களை வலம் வரும் பிச்சைக்காரர்கள், பலூன் விற்போர், பத்திரிக்கை விற்போர், பேனா, மலிவு விலைப் பொருட்களை விற்போர் என யாரையுமே பார்க்க முடியவில்லை. அனைவரும் மாயமாகியுள்ளனர்.

பிச்சைக்காரர்கள், சிறு பொருள் வியாபாரிகள் என யாருமே இல்லாமல் காணப்படுகிறது டெல்லி. அனைவரும் எங்கே போனார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இவர்களை டெல்லி அரசுதான் கட்டாயப்படுத்தி வெளியேற்றி விட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை டெல்லியை விட்டு வெளியேற்றியுள்ள மாநில அரசு, காமன்வெல்த் போட்டிகள் முடியும்வரை டெல்லி பக்கமே வரக் கூடாது என எச்சரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து இந்தோ குளோபல் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி என்ற அமைப்பின் இந்து பிரகாஷ் சிங் கூறுகையில், எங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை ரயில்களில் ஏற்றி வெளி மாநிலங்களுக்கு மாநில அரசு அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. மேலும், போட்டிகள் முடியும் வரை டெல்லிக்கு வரக் கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏழைகள் மீது கிட்டத்தட்ட பயங்கரவாதத்தை பிரயோகித்துள்ளது டெல்லி காங்கிரஸ் [^] அரசு. இது மிகவும் கொடுமையான, மனிதநேயமற்ற செயல் என்று அவர் கூறினார்.
பதிவு செய்தவர்: unmai
பதிவு செய்தது: 03 Oct 2010 4:00 pm
பிச்சைக்காரர்களை தான் வெளியேற்ற முடியும் ...? பிச்சையை அல்ல ...!!!

பதிவு செய்தவர்: பாசம்
பதிவு செய்தது: 03 Oct 2010 3:21 pm
பிச்சை எடுப்பவர்கள், ரோட்டில் குழந்தைகளுடம் வந்து பிச்சை எடுபவ்ர்களுக்கு உதவி செய்யகூடாது. அது பலபேருக்கு ஊக்கிவிப்பதாக உள்ளது. அத்துடன் இவர்கள் பல குழந்தைகளை பெற்று ரோட்டில் விடுகிறார்கள். இதனால் எல்லோருக்கும் சிரமமாக உள்ளது. ஒன்று முடிந்த வேலை செய்து பிழைக்கலாம். எங்கே வேலை ? விவசாயத்திற்கு ஆள் கிடைபதில்லை. கஷ்டப்பட்டு உழைக்கும் போதுதான் வலி தெரியும். குழந்தைகளை அதிகமாக பெற்று கொள்ள மாட்டார்கள்.

பதிவு செய்தவர்: நேசம்
பதிவு செய்தது: 03 Oct 2010 3:09 pm
டெல்லி அரசு செய்தது சரியான முடிவு எனது பாராட்டுகள்

பதிவு செய்தவர்: தமிழ்
பதிவு செய்தது: 03 Oct 2010 2:45 pm
யாருடா சொன்னது பிட்சைக்கரர்கள் ஏழைகள் என்று. அவர்களுக்கு ஒன்றல்ல பல வங்கிகளில் அக்கௌன்ட் உள்ளது. அவர்களுக்காக பரிந்து பேசும் மனித உரிமை அமைப்புகள் சிந்திக்கவேண்டும் யார் ஏழைகள் என்று. டெல்லி அரசு செய்தது சரியே. மாநிலம் கடத்தியது தப்புதான் நாடு கடத்தவேண்டும். (பின்குறிப்பு : பிட்சைக்கரர்களுக்கு சுவிஸ் வங்கி இலும் கணக்கு உள்ளது.)
பதிவு செய்தவர்: தீன்
பதிவு செய்தது: 04 Oct 2010 8:04 am
சரியான பதில் தமிழ் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக