ஆக்கம்: கலாநிதி.தயான் ஜயதிலகா
வியட்நாம், லொவோஸ், கம்போடியா, தாய்லாந்து, கொங்கோ, ஈரான், நிக்கராகுவா மற்றும் ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் சீ.ஐ.ஏ ஆயுதம் மற்றும் கிளர்ச்சிகள் மூலம் சிறுபான்மை இனங்களைப் போராட ஊக்குவித்தது. - முன்னாள் சீ.ஐ.ஏ யின் அங்கோலா பகுதித் தலைவராக 1976 ல் கடமையாற்றிய ஜோண் ஸ்ரொக்வெல் அவர்கள் கூறியது.
தமிழ் அரசியலைப் பொறுத்தவரை அதன் போக்கு உள்ளார்ந்ததாகவும் ஸ்ரீலங்கா அரசியல்மற்றொரு உப பிரிவாகவும் உள்ளது. அதன் தடைக்கல்லாக இருப்பது 18வது அரசியல் திருத்தம் அல்ல 13வது திருத்தமே.மேலும் அதன் அதிகார நடைமுறையிலான தமிழ் தேசிய வாதத்தின் அரசியல் சரித்திரம் முழுவதிலும் காணக்கிடைக்காதது பகுத்தறிவும் யதார்த்தமும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பயனோக்கு வாதத்தையும் அதன் கோட்பாடுகளையும் பரீட்சித்துப் பார்க்கத் தவறிவிட்டதா?
இதில் ஒரு முனைப்பான விதிவிலக்கு. பயனோக்கு வாதம் மற்றும் அதன் கோட்பாடுகளினதும் வித்தகரான திரு.சௌ.தொண்டமான் மட்டுமே. எப்படியாயினும் அவர் ஒரு தமிழ் தேசியவாத அரசியல்வாதியல்ல, ஆனால் ஒரு தமிழ் உழைப்பாளி வர்க்கத்தின் தலைவர். சில சந்தர்ப்பங்களில் தமிழ் தேசிய வாதத்தை அவர் ஏற்றுக்கொண்டிருந்தாலும் அவரைப் பற்றியிருந்த உழைப்பாள வர்க்கத்தின் அடித்தள வேர், பகட்டுத் தமிழ் நடுத்தர வர்க்கத்தினராலும், கீழ் நடுத்தர வகுப்பினராலும், மற்றும் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறுநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்பவர்களாலும்; இயக்கப்படும் அரசியலில் நிகழ்ந்து கொண்டிருக்கும் வான்பயணத்தில் இணைந்து பயணிப்பதிலிருந்து அவரைத் தடுத்தது.
இதன் எதிர்வாதமாக சிங்கள அரசியலிலோ அல்லது ஸ்ரீலங்கா அரசியலிலோ பகுத்தறிவு அல்லது கோட்பாடுகள் முழுவதும் குறைவாகவோ அல்லது எப்பொழுதும் குறைவாக உள்ளது என்பதை எதிர்நோக்க வேண்டியிருப்பின், பகுத்தறிவு மற்றும் யதார்த்தம் சம்பந்தமான தத்துவ சாஸ்திர மீதிகளை நான் (ஹெக்லியின் கோட்பாட்டின் படி) முன்கூட்டியே கணித்துக் கொள்கிறேன். ஆளும் சிங்கள அரசியல் எல்லாப்போதுமே பகுத்தறிவுடன் இருந்ததில்லை ஆனால் உறுதியான ஆளுமை என்கிற அடித்தளத்தில் யதார்த்தமாக உருப்பெற்றிருக்கிறது. அதாவது அதிகார உடமை குடிப்பரம்பலின் யதார்த்தத்துக்கு ஏற்றபடி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குடிப்பரம்பலின் யதார்த்ததம் மேலும் வழங்குவது, மட்டுப்படுத்தப்படும் திறன்,எஞ்சியிருக்கும் தன்மை, மற்றும் வெளிச் சக்திகளின் தலையீடுகளைத் திருப்பி அனுப்புதல் இதன் ஆதாரம் 1987 – 90 ல் நிகழ்ந்த சம்பவங்கள். சுருங்கக் கூறினால், சிங்கள அரசியல் தலைவர்கள் எப்போதும் முக்கியமான சில கோட்பாடுகளை மையமாக வைத்தே அதிகார அரசியலை இயக்கி வந்தார்கள்.
எவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பானது (அல்லது அதன் ஏதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள்) இன்னமும் கோட்பாட்டுடன் தான் இயங்கி வருவதாகக் கூறமுடியும், அவர்கள் இதுவரை பிரபாகரனின் பாசிசச் செயல்களையோ, கலாநிதி.நீலன் திருச்செல்வத்தின் கொலை பாதகம் உட்பட அதன் சொந்த உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதையோ கண்டிக்காதிருக்கும்போது. அவர்கள் இன்னமும் தனியான ஐக்கியமுள்ள பிரிக்கப்படாத ஸ்ரீலங்காவிற்குள் நடைமுறையில் உள்ளதான ஒரு தீர்வினைக் கொண்டதான கோட்பாட்டினையே நிபந்தனையின்றி ஆதரிக்காமலிருக்கும் போது எவ்வாறு அவர்களைக் கோட்பாட்டாளர்கள் எனக் கருத முடியும். ஸ்பெயினில் மற்றும் துருக்கியில் எனப் பெயர் குறிப்பிடுவதற்காக இரண்டு நாடுகளை அந்த மாதிரியான ஒரு கட்சி குற்றம் சாட்டுவதற்காகக் கண்டுபிடித்திருக்கக் கூடும்.
எவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இன்னமும் நடைமுறைக்கேற்றபடி செயற்படுகிறது என விபரிக்க முடியும்,திருப்பிக் கொடுக்கவோ, திருப்பி மாற்றவோ கூடாதென்ற கடினமான நிபந்தனைகளுடன், தமிழர்களுக்கு கிடைக்கக்கூடிய உயர்ந்த பட்சப் பெறுமதியாக இந்தியஅரசினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட 13வது திருத்தத்தின் அடித்தள வரையிலான எந்தத் தீர்வையுமே ஏற்றுக் கொள்ள மறுக்கும் போது.
1986-88 வருடங்களில் இரண்டு தெய்வீகமான அனுபவங்களை நான் உணர்ந்தேன் அதன் விளைவாக கட்டளை வடிவான வாய்பாட்டுப் பெயர்ச்சி எனது அரசியல் கண்ணோட்டத்தில் உருவானது. இரண்டாவது மாகாண சபைகள் உருவாக்கம் பெற்றபின் அப்போது இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர்களுடன் நான் சென்றிருந்தபோது. தமிழ் நுண்தேசியவாதிகளினால் இயக்கப் பட்டுக் கொண்டிருந்த இடதுசாரி ஈழம்வாதிகள் அரசை எதிர்த்து நிற்கக்கூடிய ஒரு நிலைக்கு வெளிநாட்டுத் துருப்புகளின் பிரசன்னத்துடன் கடுமையான போராட்டமில்லாத மறுசீரமைப்பாக ஸ்தாபிக்கப் பட்ட தீவை வெட்டிப் பகிரும் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைகள்; மூலம் தாழ் நிலையிலிருந்து அதிவிரைவாக மாற்றம் பெற்றனர் ஆனால் அதைப் பாதுகாப்பதற்காக விஜயகுமாரதுங்க மற்றும் 117 ஸ்ரீலங்கா மகாஜனக் கட்சியினர் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தும் பரீட்சித்துப் பார்க்காமல் அது இன்னமும் தேங்கிக் கிடக்கிறது.
இந்த தெய்வீக அனுபவங்கள் மூலம் நான் படித்தறிந்த பாடங்கள்: மறுசீரமைப்பின் மூலமாக அரசமைக்கும் அரைவாசி வாய்ப்பினை வழங்கி அதனுள்ளே இருக்கும்படி கூறினால், மூன்றாவது ஒரு வாய்ப்பாக வெளி உதவிகளை தேடிக்கொண்டு பிரிந்து செல்வது, எல்லா விதமான தமிழ் தேசிய வாதமும் வலதோ அல்லது இடதோ பின்னதைத்தான் தெரிவு செய்வார்கள். எனவே அது மாதிரியான ஒரு சந்தர்ப்பத்திற்கு அனுமதிக்கவோ அவ்வாறானதைச் செய்ய இடம் கொடுக்கவோ கூடாது.
திரு.உருத்திரகுமாரனை தற்காலிக தமிழீழ அரசாங்கமோ அல்லது வேறெதினதோ பிரதம மந்திரியாகவோ மற்றும் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளின் நகரங்கள் தோறும் மறியல் நடத்தி ஸ்ரீலங்காவை பகிஷ்கரிக்கும்படி எதை எங்களுக்குச் சொன்னாலும், அதுதான் நாங்கள் அங்கு கொண்டிருக்கும் உண்மையான எதிரிகள், நாட்டைப் பிரிக்க வேலை செய்பவர்கள். ஸ்ரீலங்காவின் உள்நாட்டு அரசியலின் இயக்கப் பண்புகள் பற்றிய விவாதங்கள் தொடரட்டும், ஆனால் நாடும் அரசும் முகம் கொடுக்கும் இருப்பியல்பின் அச்சுறுத்தல்கள மீது தெளிவான பார்வை தேவை.
காரணங்களைக் காட்டிலும் கவிதைகள்தான் தமிழ் அரசியலை ஆளுகின்றன. உண்மையில் அச்சமூட்டுவது யாதெனில் பகுத்தறிவுவாதி நடிகர்களின் மாதிரிகளே, அவை முன்னதாக எண்ணுவது அரசியல் யதார்த்தங்களைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் தன்மை மற்றும் தன்னடக்கத்தை பயிற்சிப்பதும் அது தமிழ் தேசியவாதிகள் கொண்ட சிறப்புக்குழுவுக்கும் மற்றும் அரசியல் மனச்சாட்சிக்கும் சற்றும் பொருத்தமானதாகத் தோன்றவில்லை. அது அப்படி ஆயிருப்பின் ஆள்புல பிரதிநிதித்துவம் அதிகரிக்கும், எல்லாருக்குமான வாக்குரிமை கூடும், அல்லது திரும்பக் கிடைக்கும் மற்றும் அவர்களின் பிரதிநிதித்துவ அளவு முந்திய காலனித்துவ கட்டத்துக்கு திரும்பும் அல்லது கிட்டத்தட்ட சமப்படும் என்கிற எதிர்பார்ப்புகளோடு தமிழ் தலைவர்கள் இலங்கைத் தேசிய காங்கிரஸிலிருந்து வெளியேறியிருக்க முடியாது.
50 – 50 சாத்தியமாகும் அதை அன்றைய ஜனநாயக இலங்கை அங்கீகரிக்கும், சிறுபான்மையோர் தங்களின் குடிப்பரம்பியல் மற்றும் தேர்தல் தொகுதிமுறைகளுக்கும் அதிகமாக ஒரு பாதையைத் துளைத்துக் கொண்டு செல்ல முடியும் எனத் தமிழ் தலைவர்கள் நினைத்தார்களா?
முழுதாகக் கனடாவைப் போன்றதொரு பெடரல் முறை, 70 மில்லியன் தமிழ் நாட்டுத் தமிழர்கள் கூட அனுபவிக்காத(இந்தியா மத்தியில் பலமான அரசைக் கொண்ட பாதிப் பெடரலிச முறை கொண்ட நாடு) ஒரு சாத்தியமான இலக்கை அந்தத் தொகையில் ஒரு சிறு பின்னமேயான இலங்கை ஸ்ரீலங்காத் தமிழர்களுக்குக் கிடைக்கும் என அவர்கள் தீவிரமாக நம்பினார்களா (தொடர்ந்தும் நம்பிக் கொண்டிருக்கிறார்களா)?
ஒரு மிராஜ் 2000 விமானக் கூட்டமும் 70,000 இந்தியத் துருப்புகளாலும் பாதுகாப்பாக பெயரளவில் உருவாக்கிய 13வது திருத்தத்துக்கு அப்பால் ஒரு அங்குலத்தைத் தானும் நகர்த்திவிட முடியும் எனத் தமிழ் தலைவர்கள் தீர்மானித்தார்களா? – அவர்கள் இன்னமும் அதையே செய்து கொண்டிருக்கிறார்கள்.
வரதராஜப்பெருமாள் ஒரு தன்னிச்சையான தனிநாட்டுப் பிரகடனம் மூலமாக ஸ்ரீலங்கா அரசை அச்சுறுத்த விரும்பியிருந்தாரா? பிரபாகரன் தனது துப்பாக்கிகளை இந்திய அமைதிப் படையினருக்கு எதிராகத் திருப்பியதோடு நேருவின் பேரனைக் கொலை செய்ய விரும்பியிருந்தாரா?
வரதராஜப்பெருமாள் ஒரு தன்னிச்சையான தனிநாட்டுப் பிரகடனம் மூலமாக ஸ்ரீலங்கா அரசை அச்சுறுத்த விரும்பியிருந்தாரா? பிரபாகரன் தனது துப்பாக்கிகளை இந்திய அமைதிப் படையினருக்கு எதிராகத் திருப்பியதோடு நேருவின் பேரனைக் கொலை செய்ய விரும்பியிருந்தாரா?
தமிழ் குடியுரிமைச் சமூகத்தினர் இந்தியா எல்லாவற்றையும் மன்னித்து மறந்து தலையீடு செய்து ஸ்ரீலங்கா இராணுவத்திடமிருந்து 1987 ல் செய்து பிரதிபலனாக காட்டுமிராண்டித் தனமாக இந்தியாவின் ஜாக் கென்னடியைப் போன்றவர் கொலை செய்யப்பட்டது போல 2009 லும் தலையிட்டு பிரபாகரனைக் காப்பாற்றும் என விரும்பினார்களா?
தமிழர் விடுதலைக் கூட்டணிஃதமிழ் தேசியக் கூட்டமைப்பு 1995,1997,மற்றும் 2000 ஆண்டுகளில் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க வழங்கிய அரசியல் பொதிகளை நிராகரித்தனரா? தமிழீழ விடுதலைப் புலியினர்; 2002 ஒஸ்லோ உடன்பாடுகளை பின்னீடு செய்ததுடன் 2003 டோக்கியோ மாநாட்டைப் பகிஷ்கரித்தனரா?
தமிழ் அரசியலாளர்கள் ஒரு தற்காலிக ஐரிஸ் குடியரசு இராணுவம் மற்றும் வட அயர்லாந்தின் கத்தோலிக்க சிறுபான்மையினர் பெரிய வெள்ளி உடன்படிக்கையில் ஏற்றுக்கொண்டது (பெடரலிசம் தேவையில்லை, ஐக்கியமான நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வு) என்பதிலும் அதிகம் எதிர்பார்த்தார்களா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பு 13வது திருத்தத்தை நிராகரிப்பது அது பேரம் பேசலுக்கான ஒரு பற்றாக்குறையான அடித்தள வரை என்பதினாலா? முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஸ்ரீலங்காவைத் தளமாகக் கொண்டு இம்மாத முற்பகுதியில் “ 13வது திருத்தம் ஒரு நல்ல சட்டம் அல்ல. அது முழுமையான அதிகாரப் பரவலைத் தடை செய்வதோடு மையகப் படுத்தலை நோக்கியே அதிகம் நகர்கிறது” எனப் பத்திரிகைகளுக்கு(ஞாயிறு லக்பிம நியுஸ் 3 அக்டோபர் 2010) தெரிவித்தாரா?
நீலன் திருச்செல்வம் ஸ்ரீலங்கா அரசியலில் ஒரு செயல் விளக்கத்தின் சுருக்கம். அற்பமேனும் கூட அனுபவ சாத்தியமற்றதை நடத்த வேண்டும் என நினைக்கும் அற்ப விடயம் கூட அவரது சித்தாந்தத்தில் இல்லை. அவர் புலிகளால் கொல்லப் பட்டார். பகுத்தறிவு யதார்த்தம் இரண்டிலுமான பிறவிப் பலயீனம் தமிழ் அரசியலில் உள்ளது. இதன் கருத்து யாதெனில், முக்கிய தளத்தகைமை வாய்ந்த வடக்கு மாகாண சபைக்கு பகுத்தறிவுவாதியும் யதார்த்த வாதியுமான தேவானந்தா தெரிந்தெடுக்கப்பட்டு வழிநடத்துவதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
போரின் பின்னதான முக்கிய பிரச்சனையான நாட்டின் கட்டமைப்பைக் குறித்து நிதானமாக ஆலோசித்தால் பிரிவினைக் கிளர்ச்சிக்கு இடம் குறைவாக இருந்த போதிலும் ஸ்ரீலங்கா ஒரு நிறுவன இடைவெளிக்கு அது ஒரு ஆளுமைப் பகுதியை அடித்தளமாகக் கொண்டு மத்தியுடன் அறைகூவல் விடுப்பதற்கு இடமளித்தலாகாது. ஒரு கட்டமைப்பு இடைவெளியை அடித்தளமாகப்பயன்படுத்தி வெளிநாட்டு நடிகர்கள் இம்மாதிரிக் காரணங்களை உந்தி உயர்த்துவதற்கும் கட்டாயம் இடமளிக்கக் கூடாது.
ஒரு அரசு தற்போதிருக்கும் அரசியல் நடிகர்களின் நன்மதிப்பைக் கருத்தில் கொள்ளக் கூடாது. நல்ல எண்ணங்களை மட்டும் கருத்தில் கொள்ளாது அவர்களின் செயற்படு தகுதியை மட்டுமே கவனிக்க வேண்டும். நிறுவன வகையான செய்தகுதி அல்லது செயற்படு திறன்,பெருமாள் வடக்கு கிழக்கு மாகாணசபையில் அரங்கேற்றியது போன்ற மற்றோர் நாடகத்துக்கு இடமளித்து விடக்கூடாது. ஒருவரின் நோக்கம் ஒரு காரணியாக இருக்குமாயின் 13வது திருத்தம் பேச்சுக்களை ஆரம்பிக்கப் போதுமானது, அல்லது ஒரு தொடக்கவரை என இதுவரை அங்கீகரிக்காமலும் அதை அறியும் எண்ணம் கூட இல்லாமல் தமிழ் கட்சிகள் இருக்கும்போது அவர்கள் வடக்கு மாகாணசபை நிருவாகத்துக்கு தெரிவு செய்யப் பட்டால் அதை எவ்வாறு ஒருவர் ஆய்ந்து முடிவெடுப்பது.
இன்னும் கூறப்போனால் ஒரு நல்ல நோக்கம் கொண்ட மிதவாதக் கட்சி அதன் அடிவேரிலிருந்தோ அல்லது அதன் போட்டிக் கட்சிகளிடையே எழும் போட்டி காரணமாகவோ தேசிய இன அழுத்தங்களைப் பிரயோகித்து மாகாணசபையை ஒரு பிரிவினைவாத மேடையாக மாற்றுவதற்கு தள்ளப்படாது அல்லது ஆர்வம் காட்டாது என்பதை எவ்வாறு நிச்சயம் செய்வது. தமிழ்நாடு பெரிய அளவிலான பகைமையை பைக்குள் வைத்துக் கொண்டு ஸ்ரீலங்காவின் அடுத்த வீடாக இருப்பதை ஒருபோதும் மறந்துவிடலாகாது. அது வட மாகாணசபை மீது ஒரு உந்து சக்தியைச் செலுத்தக் கூடும்.
இதன் கருத்து யாதெனில் அதிகாரப் பகிர்வு தன்னாட்சி இவைகளை வழங்குவதை பாதுகாப்பு மற்றும் தளத்தகைமை இவைகளின் நிலமைகளினைக் கருத்தில் கொண்டு பூட்டி வைத்து விட வேண்டும். ஒரு உள்நாட்டு நடிகர் அல்லது வெளிநாட்டு நடிகர் அல்லது இவர்களின் கூட்டான நடவடிக்கையினாலோ கொசோவா அல்லது தென்சூடான் போன்ற ஒரு முயற்சியை நம்மீது பரீட்சிக்கக் கட்டாயம் இடம் தரலாகாது. இது மேலும் கூறுவது, இன்னமும் முற்றாக ஏற்றுக் கொள்ளப்படாத போலி விளக்கமான உள்ளக சுயதீர்மானம் ஏன் பரிசீலிக்கப் படக் கூடாது என்பதனையும்.இன்று உள்ளக சுயதீர்மானமாக இருப்பது நாளையே வெளியக சுயதீர்மானமாக மாறலாம் என்பதைத்தான் கொசோவோ மற்றும் தென்சூடான் நிரூபித்தன.
எப்படியாயினும் அது மேலும் விளக்குவது, நிறுவனங்கள் சார்ந்த ஒழுங்கமைப்பு இந்தியாவுடனான எமது உறவுகளைச் சமநிலைப் படுத்தப் போதுமானது. அத்தோடு தமிழ் மக்களிடையே அவர்களின் உறவுகள் பின்னால் சுவர்களுக்கப்பால் இருந்தும் அவர்களுக்கு அரசியல் இடைவெளி இல்லை என்கிற உணர்வையும் தற்காத்துக் கொள்ளும்.
இனரீதியான சுயாட்சி பிரிவினையைத் தடுக்குமா இல்லை ஊக்குவிக்குமா?அது பிரிவினைக்கு ஒரு பாதுகாப்புக் கவசமா அல்லது அதற்கு கல்லெறியுமா? அது ஒரு மேடையாகப் பயன்படுத்தாத வரையில் தற்காப்பாகப் பயன்படுமா இல்லையா? சாட்சிகள் எல்லாப் பக்கமாகவும் சுழல்கின்றன. சில முக்கியமான உதாரணங்களில் அதிகளவு சுயாட்சிதான் தீர்வு, சிலவற்றில் குறைந்தளவு, இன்னும் சிலவற்றில் உள்ள நடைமுறையே சிறந்தது. இந்தோனசியாவின் “ஏசோ”வையும் மற்றும் “பஞ்சாப்”;பையும் எடுத்துக்கொண்டால் நன்மையான பலன்கள்.கொசோவோ மற்றும் காஷ்மீரை எடுத்துக் கொண்டால் தோற்றத்தில் தீமையானது.
எனது பகுப்பாய்வின் பின்னான தீர்ப்பு (அடோர்னோ மற்றும் ஹோக்கீமர் ஆகியோரின் முக்கிய உபதேசங்களின் மீள்மதிப்பிலிருந்து ஒரு சொற்றொடரை கடன் வாங்கிக் கொண்டு) இரு மனப்போக்கு மற்றும் அறியொணா வாதம் இரண்டுக்கும் இடையிலான திருப்பங்களுக்கும் ஒரு தரமான தெற்கத்தைய பதில் சிறிய பகுதி அதிகாரப்பரவலாக்கம். பிரதமராகவும் பின் ஜனாதிபதியாகவும் இருந்த போது பிரேமதாஸ மிகவும் நாட்டமுடன் உருவாக்க எண்ணிய மாவட்ட சபைகள் அல்லது பிரதேச சபைகள், அதிகாரப்பரவலாக்கத்தின் முதன்மைப் பகுதி. இந்த எண்ணம் ஜனாதிபதி ராஜபக்ஸவினால் ஏற்கப்பட்டு பின்னர் (நடைமுறைக்கேற்ப) கைவிடப்பட்டது. இந்த எண்ணம் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையாகிய அடிமட்ட நடைமுறைத் தரத்திலிருந்து அதிகாரத்தைப் பகிரும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அதாவது அதிக அதிகாரம் மிகவும் கீழ்மட்டத்திலுள்ள நிகழக்கூடிய பகுதிக்குச் செல்வதுடன் அந்த அதிகாரங்கள் திறமையாக அடக்கியாள முடியாமல் அரச கட்டமைப்பின் உயர் பகுதியினரால் பிடிக்கப் பட்டும் இருக்கும். ஆனால் பிரச்சனை என்னவென்றால் பிரதேச மட்டத்திலான தேசிய இனவாதம் அல்லது உபதேசியவாதம் என்பனவற்றை மாவட்ட அளவிலான கொள்கலத்துள் அடக்க முடியுமா? இதன் தீர்வு நிச்சயம் பிரச்சினையின் அளவிலேயே தங்கியுள்ளது. அதற்கு கட்டாயம் அண்ணளவான பொருத்தமும் உள்ளது.
ஆகையினால் மாகாணசபைமுறை நிச்சயம் இருக்கவேண்டும் அல்லாவிடில் நிரந்தரமாக அந்நியப் படுத்தப்பட்ட மற்றும் அடக்கமுடியாத ஒரு வடக்கும் அதையும் விட இன்னம் மோசமான நட்புக் குறைவான ஒரு டெல்லியுமே நம்மிடம் இருக்கும். தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தல்கள் அடுத்த வருட ஏப்ரல் மே மாதங்களில் நடக்கவிருப்பதால், கொழும்புக்கு ஒரு பாதுகாப்பான பின்பகுதியாக மற்றும் தளத்தகைமை வாய்ந்த ஒரு பங்காளி என்ற வகையில் தென்னிந்தியா உட்பட இந்தியா தேவைப்படுகிறது.
தமிழில்: எஸ்.குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக