சுவிற்சலாந்தின் பேர்ண் மாநகரத்தில் உள்ள Verchingen பிரதேசத்தில் hamlet Lindental பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நண்பர்களுடன் வசித்து வந்தபோது கடந்த மாதம் 21 ஆம் திகதி காலையில் கடத்தப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.பெண் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஒன்றின் பின்னணியில் இலங்கைத் தமிழர்கள் இருவர் இவரைத் துப்பாக்கி முனையில் காரில் ஏற்றி, கயிற்றால் கட்டி, பிரான்ஸுக்கு கொண்டு கடத்திக் கொண்டு வந்திருக்கின்றார்கள்.
இவரைக் கண்டுபிடிக்க சுவிற்சலாந்து, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அந்த அந்த நாட்டுப் பொலிஸார் தீவிர புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டிருந்தன. இவர் பாரிஸுக்குத்தான் கடத்திக் கொண்டு வரப்பட்டிருக்கின்றார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பாரிஸ் பொலிஸார் கடந்த 02 ஆம் திகதி இவரைக் கண்டு பிடித்துக் காப்பாற்றினார்கள்.
அத்துடன் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட சிலரைக் கைது செய்தும் உள்ளார்கள். சட்டவிரோத தடுத்து வைப்பு ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இன்னும் பலர் கைது செய்யப்பட இருக்கின்றார்கள். காப்பாற்றப்பட்ட இளைஞன் சுவிஸுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக