புதன், 27 அக்டோபர், 2010

'காதலாவது கத்தரிக்காயாவது...'! - சினேகாவின் சலிப்பு

Sneha
அச்சமின்றி அச்சமின்றி என்று ஒரு படம் வெளியானது. அந்தப் படம் தொடங்கி ரிலீஸாகும் வரை சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் காதல், சகமுசா என செய்திகள் வந்தவண்ணமிருந்தது.

அந்த நேரம் பார்த்து இருவரும் ஜோடியாக சினிமா விழாக்களுக்கு வருவது, சிறப்புக் காட்சிகள் பார்ப்பது என மேலும் கிசுகிசுக்களுக்கு இடம் கொடுத்தனர். அச்சமின்றி அச்சமின்றி வெளியாகி, சத்தமின்றி பெட்டிக்குள் போன கையோடு இவர்களின் காதல் கிசுகிசுக்களும் காணாமல் போயின.

அடுத்த சில மாதங்கள் கழிந்தது. இப்போது மீண்டும் இருவரையும் இணைத்து காதல் கிசுகிசுக்கள் பரபரப்பாகக் கிளம்பியுள்ளன.

இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளக் கூடும் என்ற அளவுக்குப் போய்விட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் சினேகாவிடம் கேட்டால், முன்னிலும் அப்பாவியாக, அப்படியா? என்கிறார்.

"இதுக்கு முன்ன எத்தனையோ நடிகர்களோட இணைச்சுப் பேசிட்டாங்க. அப்போல்லாம் நான் ரொம்ப டென்ஷனாயிடுவேன். ஆனா இப்போ சகஜமாயிடுச்சி. பிரசன்னாவோட முன்பு சேர்த்துப் பேசியபோது இருந்ததைவிட இப்ப கூலான மனநிலைக்கு வந்துட்டேன். யாரோடயும் காதலுமில்ல, கத்தரிக்காயுமில்ல... அடுத்து நான் நடிச்ச பவானி படம் வருது. அதுலதான் என் கவனமெல்லாம்" என்றார்.

ஒருவேளை படம் ரிலீஸானதும் வழக்கம்போல இந்த கிசுகிசுவும் அடங்கிடுமோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக