செவ்வாய், 5 அக்டோபர், 2010

லண்டன், பாரீஸ் போன்ற ஐரோ ப்பிய நகரங்களில் மும்பை தாக் குதல் பாணியில் தாக்குதல் நடத்த

அமெரிக்கர்களை விழிப்போடு இருக்குமாறு வேண்டுகோள்
லண்டன், பாரீஸ் போன்ற ஐரோ ப்பிய நகரங்களில் மும்பை தாக் குதல் பாணியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்ட மிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பாவில் வசித்து வரும் மற் றும் அங்கு பயணம் செய்யும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்க வெளி யுறவுத்துறை பயண எச்சரிக்கை விடு த்துள்ளது. அதில் பஸ், ரயில் நிலையங்கள், சுற்றுலா இடங்கள் போன்றவற்றை தீவிரவாதிகள் குறிவைக்கக் கூடும் என்றும், அமெரிக்கர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த எச்சரிக்கை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக