சனி, 16 அக்டோபர், 2010

இரவில் வீடொன்றுக்குள் அத்துமீறி புகுந்த படைச் சிப்பாய் வெட்டிக்கொலை



வடமேல் மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம் பகுதியில் இரவு நேரத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி பிரவேசிக்க முற்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரகசியமாக வீட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது வீட்டு உரிமையாளர்களும் கிராம மக்களும் இணைந்து குறித்த படைவீரரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
பலவத்த இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த 31 வயதான தினுக் பெர்னாண்டோ என்ற படைச் சிப்பாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரவு நேரத்தில் குறித்த படைச் சிப்பாய் ஏன் வீட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்டார் என்பது இன்னமும் மர்மமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த காலங்களில் வடக்கிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக