சனி, 2 அக்டோபர், 2010

வடக்கில் தொழில் வளர்ச்சி


ஒரு இனத்தின் வளர்ச்சி மொழி, மதம் போன்ற இனத்துவ அடையாளங்களின் அங்கீகாரத்துட னும் அரசியல் அபிலாஷைகளின் அங்கீகாரத் துடனும் மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல. அந்த இனம் செறிந்து வாழ்கின்ற பிரதேசத்தின் அபிவிருத்தியுடனும் சம்பந்தப்பட்டது. பிரதேச அபிவிருத்தி மக்க ளின் பொருளாதார வாழ்வு மேம்பாடடைவதற்கு அடி ப்படையாக அமையும்.
இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றுச் செயற்பட்டவர்கள் பின்பற்றிய கொள்கையும் அணுகுமுறையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இனப் பிரச்சினைக் குத் தீர்வு காணும் முயற்சியில் சிறிதளவேனும் இவர் கள் முன்னேற்றம் அடையவில்லை என்பதும் இவர்களின் பிழையான நிலைப்பாடுகள் காரணமாக மக்கள் பாரிய இன்னல்களுக்கு உள்ளாகினர் என்பதும் பரவலாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள்.
இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் முன்னேற்றம் காணாதது ஒருபுறமிருக்க, தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் அபிவிருத்தியிலும் பின் தங்கியுள்ளன. இப்பிரதேச மக்களைப் பிரதிநிதித்து வப்படுத்திய தலைவர்கள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான அர சாங்கங்களே காலத்துக்குக் காலம் அக்கறை செலுத் தியிருக்கின்றன. ஆனால் அப்பிரதேச அரசியல் தலை மைகள் அரச எதிர்ப்பு காரணமாக ஒத்துழைப்பு நல்கவில்லை.
அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையில் 1971ம் ஆண்டு சில சிறிய கைத்தொழில் நிலையங்கள் அமைக்கப்ப ட்டன. எனினும் அத்தொழில் நிலையங்கள் தொடர் ந்து இயங்க முடியவில்லை. இன்று பற்றையடர்ந்த பூமியாக மாறியிருக்கும் அக்கைத்தொழிற் பேட்டை க்கு மீண்டும் உயிரூட்டும் பணி இப்போது ஆரம் பித்திருக்கின்றது. இந்திய அரசாங்கம் உதவியாக வழங்கும் 178 மில்லியன் ரூபா செலவில் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை மறுசீரமைக்கப்படுகின்றது. தொழிற்சாலைகளுக்கான கட்டடங்களும் நிர்வாகக் கட்டடமும் நிர்மாணிக்கப்படுகின்றன.
ஆடைத் தொழிற்சாலைகள், பிளாஸ்ரிக் தொழி ற்சாலைகள் உட்பட ஏறக்குறைய முப்பத்தாறு தொழிற்சாலைகள் இப்பேட்டையில் அமையவுள்ளன. வடக்கின் பாரம்பரிய மூலவளங்களைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் இங்கு அமைவது பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்குப் பெரிதும் உதவும். அச்சுவேலி கைத்தொழிற் பேட்டை முழுமையாகச் செயற்படத் தொடங்கியதும் நாலாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்புப் பெற முடியும். இக்கைத்தொழிற் பேட்டையை அபிவிருத்தி செய் வதில் 2012ம் ஆண்டு இறுதி வரை இந்திய அரசாங்கத்தின் உதவி கிடைக்குமென்பது குறிப்பிடத்தக்கது.
வட மாகாணத்தின் வளர்ச்சிக்குக் கைகொடுக்கக் கூடிய இக்கைத்தொழிற் பேட்டையை இயன்றளவு விரை வில் முழுமையாகச் செயற்படுத்த வேண்டும் என்ப தில் அரசாங்கம் கூடுதலான அக்கறை செலுத்துகி ன்றது. வட பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அர சியல் தலைவர்கள் இப்பேட்டையின் முக்கியத்துவம் கருதி இதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நம் தலைவர்கள் பிரதேச அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை இப்போதாவது உணர்ந்து செயற்படுவார்களென நம்புகின்றோம்.
(தினகரன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக