வெள்ளி, 15 அக்டோபர், 2010

அமெரிக்காவைச் சென்றடைய முயன்ற இலங்கையர் இருவர் கைது

இலங்கையர் இருவர் உட்பட மீன்பிடிபடகு ஒன்றில் அமெரிக்காவைச் சென்றடைய முயன்ற சட்டவிரோத பயணிகள் 31 பேரை கடந்த திங்கட்கிழமை அந்நாட்டு கடலோர காவல் துறையினர் இடைமறித்துப் பிடித்துள்ளார்கள். இச்சட்டவிரோத பயணிகளில் 19 பேர் ஹெய்ட்டியையும்,06 பேர் பிறேசிலையையும் மற்றும் 04 பேர் ஜமெய்க்காவையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டவிரோத பயணிகள் தெற்கு புளோரிடா மாநிலத்தைச் சென்றடைய முயன்றபோது பொயன்டன் கடற்கரையை அண்டிய கடல் பரப்பில் வைத்து காவல்துறையினரின் படகுகளால் சுற்றி வளைக்கப்பட்டார்கள்.

சட்டவிரோத பயணிகள் மாத்திரம் அன்றி அவர்களை படகில் அழைத்து வந்த கணவன் - மனைவி இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். படகு இவர்களுடையது எனவும், அவர்கள் மியாமி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் இதற்கு முன்பும் ஆட்கடத்தல்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள் எனவும் சட்டவிரோத பயணிகள் இப்பயணத்துக்காக தலா 5000 அமெரிக்க டொலர் வரை இவர்களுக்கு கொடுத்துள்ளார்கள் என்றும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக