செவ்வாய், 5 அக்டோபர், 2010

சிறையில் உள்ள புலி உறுப்பினர்களால் பொன்சேகாவுக்கு அச்சுறுத்தல்- கரு ஜெயசூரியா!

 
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களினால் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகாவை பார்வையிடுவதற்காக கரு ஜயசூரிய நேற்றைய தினம் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து பொன்சேகாவை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே கரு ஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கரு, வெலிக்கடைச் சிறைச்சாலையில் 30 மாத கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகாவிற்கு அச்சுறுத்தல் நிலவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சரத் பொன்சேகாவிற்கு போதியளவு பாதுகாப்பை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக