புதன், 6 அக்டோபர், 2010

ரம்லத் வழக்கு, பிரபுதேவாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபுதேவா அதிர்ச்சி:வக்கீல்களுடன் அவசர ஆலோசனை? 

பிரபுதேவாவை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அவரது மனைவி ரமலத் நேற்று சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பிரபுதேவாவை நயன்தாரா தன்னோடு அழைத்து சென்று விட்டார் என்றும் நயன்தாராவை விரைவில் திருமணம் செய்வேன் என்று என் கணவர் அறிவித்து இருப்பதால் எனது வாழ்க்கை நாசமாகி விடுமோ என அஞ்சுகிறேன் என கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

என்னோடு சேர்ந்து வாழ கணவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ரம்லத் வழக்கு தொடர்ந்தது பிரபுதேவாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரம்லத்துக்கு எதிர் மனு தாக்கல் செய்ய வக்கீல்களு டன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் மத்தியஸ்தர்கள் மூலம் சமரச முயற்சியிலும் பிரபுதேவா ஈடுபட்டு உள்ளார். கோர்ட்டுக்கு வெளியே சுமூகமாக இப்பிரச்சனை பற்றி பேசி தீர்வு காணலாம் என தூது அனுப்பி வருகிறாராம். ஆனால் ரம்லத் எதற்கும் உடன்படவில்லை என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக