வெள்ளி, 15 அக்டோபர், 2010

தனுஷ் செல்வராகவன் ரகசிய திட்டம்

     னுஷுக்கு ஆடுகளம்,  சீடன்,  உத்த புத்திரன் என அடுத்தடுத்து படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன. மாப்பிள்ளை படமும்கூட கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.  இந்த அதிரடி தொடர் படங்களுக்களின் எண்ணிக்கையை மேலும் கூட்ட தனுஷும் செல்வராகவனும் ரகசிய திட்டமிட்டு களத்திலும் இறங்கி கலக்கி வருகிறார்களாம்.



தனுஷ் - செல்வராகவன் சகோதரக் கூட்டணி தற்போது ‘மறவன்’  படத்தில் இணைந்துள்ளது.  இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பையும் படு கமுக்கமாக முடித்துள்ளனராம். பத்து நாட்களாக நடந்த ‘மறவன்’ படப்பிடிப்பில் எல்லோரையும் தூங்கவிடாமல் வேலை வாங்கினாராம் செல்வா.மொத்த யூனிட்டும் மொத்தமாகவே தினமும் நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்கியதாம்.    
  
இப்படி நடந்து முடிந்த முதல் கட்டப் படப்பிடிப்பிலேயே படத்தின் ரொம்பவே கஷ்டமான காட்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டதாக கூறி பெருமைப்படுகிறது படக்குழு. படத்தின் நாயகியாக ஆன்ட்ரியா நடிக்க,  இசைப்பணியை ஜீ.வி. பிரகாஷ் ஏற்றுள்ளார்.  
 
முக்கியமான காட்சிகள் பல முடிந்துவிட்டதால் மற்ற காட்சிகள் விரைவில் எடுக்கப்பட்டு இந்தப் படமும் தற்போது வெளிவரவிருக்கும் தனுஷ் படங்களின் வரிசையில் இடம்பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக