குழந்தைகள் என்றாலே எல்லோருக்கும் பிடிப்பது இயல்பானதுதானே. அப்படியே பிடித்தமான குழந்தைக்கு பரிசு கொடுப்பதும வழக்கம் தானே. இந்த நடைமுறை வழக்கம்தான் குழந்தைகள் நடித்த ‘பசங்க’ படத்திற்கும்.
தமிழ்நாட்டு விருது, பாண்டிச்சேரி விருது, இந்திய தேசிய விருது, சர்வதேச விருது எல்லாம் பத்தாது என்று, இப்போது சீன விருதையும் அள்ளிக்கொள்ளவிருக்கிறது ‘பசங்க’
இந்தச் செப்டம்பர் மாதத்திலேயே சிறந்தத் தமிழ் படம், சிறந்த வசனகர்த்தா, சிறந்த குழந்தை நட்சத்திர விருதுகள் இரண்டு என மொத்தம் 4 தேசிய விருதுகள் மற்றும் பாண்டிச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருது ஆகியவற்றைப் பெற்ற ‘பசங்க’ படம் சீன திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கிறது.
19வது சீன ‘கோல்டன் ரூஸ்ட்டர் & ஹன்ட்ரட் ஃப்ளவர்ஸ்’ திரைப்பட விழா ஜியாங்ஜெயின் நகரில் அக்டோபர் 11 முதல் 16 வரை நடைபெறுகிறது.
இந்த விழாவில் திரையிடுவதற்காக இந்தியாவின் சார்பில் 'பசங்க' திரைப்படம் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக பசங்கப் படத்தின் சிறந்த தயாரிப்பாளர் சசிக்குமாரும், சிறந்த இயக்குனர் பாண்டிராஜும் சீனாவுக்கு பறக்கவிருக்கிறார்கள்.
ஏற்கனவே, கடந்த 2009ஆம் ஆண்டில் ‘சர்வதேச குழந்தைகள்’ திரைப்படவிழாவில் ‘பசங்க’ படம் திரையிடப்பட்டது. அதில் சிறந்த இயக்குனருக்கான ‘தங்க யானை’ விருதை வென்றது பசங்க. அதேபோல் இந்தச ‘சீன கோல்டன் ரூஸ்டர்’ திரைப்படவிழாவிலும் சிறந்த விருதொன்று பசங்க படத்திற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
‘பசங்க’ போனா சீனா விருதும் தானா வரும்... வாழ்த்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக