சனி, 2 அக்டோபர், 2010

அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே முறுகல் நிலை

ஆப்கானிலுள்ள நேட்டோ படைகளுக்கான விநியோகப் பாதையை பாகிஸ்தான் மூடியுள்ளது. இது பாகிஸ்தானுக்கூடாகச் செல்லும் பாதை. நேட்டோ படைகளின் தாக்குதலினால் 3 பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் நேற்று கொல்லப்பட்டிருந்தனர். இதன் எதிரொலியாகவே மேற்படி அதிரடி நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. இந்நடவடிக்கையானது அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையில் முறுகல் நிலையை தோற்றுவிக்கலாமெனக் கருதப்படுகின்றது. மூடப்பட்ட இப்பாதையானது ஆப்கானினுள்ள நேட்டோ படைகளுக்கான முக்கியமானதொரு விநியோகப் பாதையாகும். மேலும் நேட்டோவினால் இதன் மூலம் அங்கு முன்னெடுக்கப்படும் போர் நடவடிக்கைகளும் பாதிக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக