வியாழன், 7 அக்டோபர், 2010

அழகாக இருக்கிறார் ஜெனிலியா" - கே.எஸ்.ரவிகுமார்

Genelia is Prothy - Says K.S.Ravikumarஆந்திராவில் வெற்றி பெற்ற `ரெடி என்ற தெலுங்கு படம், `உத்தமபுத்திரன் என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது. தனுஷ்-ஜெனிலியா ஜோடியாக நடிக்கிறார்கள். மித்ரன் ஆர்.ஜவஹர் டைரக்டு செய்து வருகிறார். எம்.வி.மோகன் அப்பாராவ், டி.ரமேஷ் தாண்ட்ரா ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் பாடல்கள்  வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகை சினேகா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் கலந்துகொண்டு பேசுகையில்,
``இந்த படத்தின் கதாநாயகி ஜெனிலியா, அழகான நடிகை. முத்து பல் வரிசை என்று சொல்வார்கள். அவருக்கு பல்லுதான் கொஞ்சம் பெரிசு. என்றாலும், அழகாகவே இருக்கிறார். என்றார். விழாவில், நடிகர் தனுஷ், நடிகை ஜெனிலியா, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கே.முரளிதரன், பட அதிபர்கள் `கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.பி.சவுத்ரி, டைரக்டர் மகேந்திரன், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, ஆகியோரும் பேசினார்கள். டைரக்டர் மித்ரன் ஆர்.ஜவஹர் நன்றி தெரிவித்து பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக