வெள்ளி, 29 அக்டோபர், 2010

அதிரடியாய் அருவா தூக்கும் தனுஷ்...

யாரடி நீ மோகினி, குட்டி படங்களைத் தொடர்ந்து தனுஷ் - மித்திரன் ஜவஹர் இணைந்துள்ள மூன்றாவது (ரீமேக்)படமான உத்தமபுத்திரன் தீபாவளி திரைவெடியாக வெடிக்கவிருக்கிறது. தமிழகம் எங்கும் கிட்டத்தட்ட 600 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது உத்தமபுத்திரன். 



உத்தம புத்திரனைத் தொடர்ந்து ஆடுகளம், சீடன், மாப்பிள்ளை என அடுத்தடுத்து தனது படங்கள் வெளியாகவிருப்பதால் ஏகபட்ட குஷியில் இருக்கிறாராம் தனுஷ். 

இதே சந்தோஷத்துடன் இப்போது அருவா தூக்கவும் தயாராகிவிட்டார் தனுஷ்...

புலி வருது... புலி வருது... என்ற கதையாக பலமாதங்களாக ஹரியின் அடுத்தப்படத்தில் தனுஷ் நடிக்கப் போகிறார் என்ற செய்தி திரைவட்டாரத்தில் வலம்வந்து கொண்டிருந்தது. இப்போது உண்மையாகவே புலி வரப்போகுதாம். அதுவும் சாதாரணப் புலி இல்லை, இது வேங்கைப் புலியாம்.

ஹரியின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப்போகும் படத்திற்கு ‘வேங்கை’ என பெயரிட்டுள்ளனர்.ஏற்கனவே‘அருவா’ என வைத்திருந்த தலைப்புதான் ‘வேங்கை’யாக மாறியிருக்கிறதாம்.

படிக்காதவன் படத்திற்கு பிறகு மீண்டும், இந்தப் படத்தில் தனுஷுக்குஜோடியாக நடிக்கிறார் தமன்னா. படத்தில் மிகவும் முக்கியமான வேடத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். தயாரிப்பு - வெங்கட்ராம ரெட்டியின் விஜயா வாஹினி படநிறுவனம்.

சூர்யாவின் நடிப்பில் ‘சிங்கம்’மாக கர்ஜித்து மிகப்பெரிய வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து... தனுஷ் நடிப்பில்‘வேங்கை’யாக வெற்றி வேட்டையாட போகும் ஹரி இந்தப் படத்தை பற்றி...

‘கோபக்காரன் அரிவாள் எடுத்தால் தப்பு. காவல்காரன் அரிவாள் எடுத்தால் தப்பு இல்லை’ என்பதுதான் ‘வேங்கை’படத்தின் கதைக் கரு.

படத்தில் தனுஷூக்கு கிராமத்து கோபக்கார இளைஞன் கதாபாத்திரம்.  தமன்னா - அழகான கிராமத்து பொண்ணா வராங்க. வேங்கை சிவகங்கை மாவட்டத்து மக்களின் பாசம், நேசம், கோபத்தை விளக்கும் படமாக இருக்கும்.  சிவங்கை பகுதியைச் சார்ந்த கதை என்பதால் படப்பிடிப்பையும் அங்கேயே நடத்தலாம் என்பதுதான் திட்டம்.” என்றார் ஹரி. 

குறிப்பிட்ட கால செட்டியூலில் படத்தை வேகமாக எடுத்து விரைவில் வெளியிட்டுவிடும் இயக்குனர் என்ற பெயர் திரைவட்டாரத்தில் ஹரிக்கு உண்டு. அதனால ‘வேங்கை’ அதிவிரைவில் திரையில் பாயும் என இப்போதே நம்பலாம்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக