வியாழன், 14 அக்டோபர், 2010

இடது சாரிகளை முறியடிக்கக் கள்ளர் எல்லோரும் வட்டுக் கொட்டையில் கூட்டுச் சேர்ந்தார்கள்

பின்பு அந்த இரகசியத்தை எந்திரன் பெற்றுக் கொண்டது......இப்பொழுது யாரிடம்...
- பத்மன்
Prabakaran இதைப் பார்ப்பதாயின் 70 களில் இருந்து பார்க்கவேண்டும்... எமக்குத் தலமை தாங்கியவர்கள் உண்மையைப் பொய்யென்று  பொய்யை உண்மை என்றும் சொல்லும் சட்டத்தரணிக்ளே .இவர்களின் அரசியல் எடுபடவில்லை.
70  பது களில் முக்கிய தலைவர்கள்  இடது சாரிகளிடம் தோத்தார்கள். ஜீ.ஜீ பொன்னம்பலம், அமிர்தலிங்கம் , அட்ங்காத் தமிழன்  சுந்தரலிங்கம் ..  இன்னும் பலர்.இடது சாரிகள் தமிழ் மக்கள் மத்தியிலும் , உழைக்கும் மக்கள் மத்தியிலும் நன்றாகக் கால் பதித்து விட்டார்கள்.
துரையப்பா போன்றவர்கள் யாழ்ப்பானத்தில் பெரும் அபிவிருத்தி செய்தார்கள் . எச்சாமம் புகினும் நிச்சாமக் கண்கள் நீறாகப் பூத்திருக்கும் என்று நிச்சாமப் போராட்டம் போன்ற விடுதலைப் போராட்டங்களை இடது சாரிகள் ஊக்குவித்தார்கள்.
அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் சொன்னார் நிச்சாமத்தில் குட்டி வியட்னாம் உருவாகி விட்டது என்று..
இடதுசாரிகள் மத்தியில் ஆயுதம் தரித்தவர்களும் இருந்தார்கள் .
இந்த நேரத்தில் தரப் படுத்தல் சட்டம் வந்தது....அந்தச் சட்டத்தால் தான் யாழ்ப்பாணம் தவிர்ந்த மற்றைய  தமிழ் மாவட்டங்களான , மன்னர், கிளிநொச்சி , வவுனியா , முல்லைத்தீவு , திரிகோண்மலை, மூதூர் , அம்பாறை , மட்டக்களப்பு போன்ற இடங்களில் இருந்தும் மலையகத்தில் இருந்தும் முதல் முதலாகத் தமிழர்கள் பல்கலைக் கழகம் சென்றார்கள் .
முதல் முதலாகத் தமிழர்கள் பல்கலைக் கழகம் சென்றார்கள் .
5% மாத்திரமே இனரீதியான தரப் படுத்தல். இதனால் யாழ்ப்பாண இளைஞர்கள் பாதிக்கப் பட்டார்கள் . ஏனைய இடத்துத் தமிழ் இளைஞர்கள் லாபம் அடைந்தார்கள் .
10 ம் வகுப்புச் சித்தியடையாதவனும் தான் தரப்படுத்தலால் பாதிக்கப் பட்டதாக நம்பும் படி தமிழ் தலைவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.
இடது சாரிகளில் உள்ள சாதாரண எந்திரன்களை(ஆயுத இளைஞர்களை) முறியடிக்க இவர்களுக்கு- (தமிழ் பொய்சொல்லும் தலைவர்களுக்கு) இளைஞர்கள் தேவைப் பட்டார்கள்.நல்ல எந்திரனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
உருவாகிய எந்திரனில் இவர்களுக்குப் பிடித்தது மாவீரன் பிரபாகரனே. இவர்கள் துரையப்பாவைத் துரோகியென்று சொல்ல சுட்டு விட்டே வந்தான் அந்த எந்திரன்.இவர்கள் தங்கள் வீடுகளில் வைத்தே Recharge பண்ணினார்கள். யோகேஸ்வரன் காப்பி கொடுத்தது...
இடது சாரிகளை முறியடிக்கக் கள்ளர் எல்லோரும் வட்டுக் கொட்டையில் கூட்டுச் சேர்ந்தார்கள். அது தான் சாத்தியப் படாத தமிழீழப் பிரகடனம். அப்பொழுது இடதுசாரிகளி தலைவன் சண்முகதாசன் சுண்ணாகக் கூட்டத்தில்  கேட்டார் . எவ்வறு தமிழீழம் சாத்தியம் என்று .
அதற்கு அமிர்தலிங்கம் அது எல்லாம் இரகசியம் , வெளியில் சொல்ல முடியாது என்றார் .பின்பு அந்த இரக்சியத்தை எந்திரன் பெற்றுக் கொண்டது...
ஆரம்பத்தில் பல எந்திரன்களுக்குள் போட்டி இருந்தாலும் , கள்ளர்கள் வளர்த்த எந்திரன் தான் வென்றது...
எந்திரன்கள் நன்றாகதான் போய்க்கோன்டு இருதது .... அதன் பிழைகள் சாதாரண மக்களுக்கு விளங்கவில்லை
CIA Istrael சிவப்புக் காட்டு வைக்கு மட்டும் சாதாரண மக்களை எமாற்றிச்சுது .. அதற்குப் பிறகு இந்தியாவுடன் முரண் பட்டிட்டுது.. எந்திரனுக்கு விளங்கவில்லை கரண்டை நிப்பாட்டுகிறது இந்தியா தான் என்று ...
இதற்குப் பிறகு எல்லருக்கும் தெரியும் தானே ...
கடைசி நேரத்தில் சிவப்புக் காட்ட புரோகிராம் பண்ணினதுகள் புலன் பெயர்ந்ததுகள் தான் மன்னிக்கவும் புலம்பெயர்ந்த தமிழர்தான். அது தான் அப்ப்டிப் போச்சுது....
பி.கு.
இப்பொழுது முகப்புத்தகத்தில் வியாபாரம் போற இரண்டு விடயங்கள் காதலைப் பற்றிக் கதைக்கிறதும் , துரோகிகளைப் பற்றிக் கதைக்கிறதும் தான். கள்ளர்கள் வழிவந்த நாங்கள் எப்படி உண்மையைக் கதைக்கலாம் . அந்த மாவீரனுக்கு என்ன நடந்த என்ற உண்மையைத் தன்னும் கதைபபார்களா ?
ஒருவிரலால் துரோகியச் சுட்டிக்காட்டும் பொழுது மூன்றுவிரல்கள் எம்மைச் சுட்டிக் காட்டும் என்பதை மறப்போம்...துரோகிகள் உள்ளமட்டும தான் எங்கடை வியாபாரம் நன்றாகப் போகும்
இடது சாரிகளை முறியடிக்கக் கள்ளர் எல்லோரும் வட்டுக் கொட்டையில் கூட்டுச் சேர்ந்தார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக